பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 குண்டுகளால் தாக்கிப் பெரும் பகுதியை அழித்து விட்டனர். அரண்மனை முழுதும் பிணக்காடாகிவிட்டது. பொட்டாலா அரண்மனையிலும் சில பகுதிகள் தாக்கப்பட்டன. லாஸா மக்களின் வீடுகள் பலவும் தீக்கிரையாயின. சீனர் படையெடுத்து எட்டு வருடங் கள் கழிந்த பின்பும் அவர்கள் ஒழிய வேண்டுமென்று ஆவேசத்துடன் கிளம்பிய திபேத்திய மக்களில் பல்லாயிரக்கணக்கானவர் தலைநகரின் வீதிகளில் பிணங்களாகக் கிடந்தனர். நர்புலிங்கா அரண்மனையில் சிதறிக் கிடந்த பிணங்களை நள்ளிரவில் சீனத் தளபதிகள் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து, அவைகளில் தலாய் லாமாவின் உடல் காணப் பெறாமையால், அவர் தப்பி ஒடியிருக்க வேண்டுமென்று தெரிந்து கொண்டனர். பின்னர் விசாரித்து விவரம் அறிந்தனர்.

சீனரின் அசுரத்தனமான கொடுமைகள்

திபேத்தில் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காகச் சீனர்கள் சுமார் பத்து ஆண்டுக் காலமாக இயற்றி வந்த கொடுமைகள் அனைத்தையும் தொகுத்துக் கூறினால் அது படிப்பதற்கோ, கேட்பதற்கோ மிகப் பயங்கரமாயிருக்கும். அளவில் அது பல பாரதங்களாக முடியும். மேலும் வெளியில் மற்றவர்களுக்குத் தெரியாதபடி சீனர்கள் புரிந்த கொடுமைகள் என்றுமே வெளிவர முடியாதவை. படைகள் ஒன்றையொன்று சுட்டுத் தள்ளுவதையும், ஆயிரக்கணக்கான கலகக்காரர்களைப் பட்டாளம் குண்டுகள் வீசி வதைப்பதையும் நாம் கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால் மக்களில் பதினாயிரக் கணக்கானவர்களைத் தேர்ந்தெடுத்து, தனித் தனியே அவர்களை ஈவிரக்கமில்லாது துன்புறுத்தி, அவமானப்படுத்தி, பலவிதமான முறையில் சித்திரவதை செய்வதை எவரும் எளிதில் யூகித்துக்கொள்ள

234