பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 னார்கள். துறவிகளின் தலைகளை வெட்டி யெறிவதற்கு முன்னல் இப்படியெல்லாம் அவர்களை அலங்கோலமாக அவமானப்படுத்துவது சீனருடைய வழக்கமாயிருந்தது.

பெரும்பாலான லாமாக்களைச் சீனப் படையினர் பரலோகத்திற்கே அனுப்பிவிட்டனர்; மற்றும் பல சந்நியாசிகளைக் கட்டாயப்படுத்திச் சம்சாரிகளாக்கி விட்டனர். மூன்று லட்சத்திற்குமேல் எஞ்சியிருந்த துறவிகளைச் சுட்டுத் தள்ளி வீணாக்கவேண்டாமென்று, சாலைகள் அமைப்பதற்கும், ரயில் பாதைகள் அமைப்பதற்கும், கட்டடங்கள் கட்டுவதற்கும் உபயோகித்துக் கொண்டார்கள். பல மின்சார நிலையங்களும், பாலங்களும் அமைக்கப்பட்டன. உள்நாட்டில் பல ரஸ்தாக்கள் போடப்பட்டதுடன், திபேத்துடன் சீனாவை இணைத்து இரண்டு பெரிய சாலைகளும் அமைக்கப்பட்டன. இவற்றில் ஒன்று திபேத்து - சிங்கியாங் நெடுஞ்சாலை. 12 ஆறுகளின் மீது பாலங்கள் கட்டி, 14 மலைகளின் மீது அமைந்த இப்பெருவழி 1,400 மைல் நீள முள்ளது. சாலைகளில் துறவிகள் காலேயிலிருந்து இரவு வரை வேலை செய்யவேண்டும். உண்பதற்குக் கூட அவர்களுக்குப் போதிய நேரம் கிடையாது. அளித்த வேலைகளைக் குறித்த நேரத்தில் முடிக்காதவர்களுக்கு உணவு கிடையாது. கைகளில் கொப்புளம் அல்லது வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பவர்களே நன்றாக வேலை செய்தவர்களாகக் கருதப் பெற்றார்கள்!

துறவிகளுக்கெல்லாம் கட்டாயத் திருமணம் செய்து வைக்கும் வேலையைச் சீனப் படையினர் தொடர்ந்து நடத்திவந்தனர். சீனாவிலிருந்து ஏராளமான பெண்கள் இதற்காக வரவழைக்கப் பெற்றிருந்தார்களாம். நாங்ஸாங் கோம்பா மடத்தில் தெர்கோங் சோஸே என்ற துறவியைச் சீனர்கள் தியானம் ஜபம்

238