பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 தொடங்கி நமது அஸ்ஸாம் ராஜ்யம் முடிய நீண்டு, திபேத்து-இந்திய எல்லையாக விளங்கும் மக்மகான் கோடு என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் காலத்தில் அவர்களுடைய நன்மைக்காக அமைத்துக் கொள்ளப் பெற்றது என்று சூ என்-லாய் அதையும் மறுத்துவிட்டார். இந்த மறுப்பு எவ்வளவு நியாயம் என்பதைப் பின்னால் விவரமாகக் கவனிப்போம். மறுப்பு எந்தப் பிரதேசங்களை யெல்லாம் பாதிக்கின்றது என்பதை மட்டும் இங்கே காண்போம்.

நேப்பாளம்

நேப்பாளம் இமயமலைச் சாரலிலுள்ள சுதந்தரமான நாடு. உலகில் இது ஒன்றுதான் தனி இந்து ராஜ்யம். இதன் பரப்பளவு 54,362 சதுர மைல்; ஜனத்தொகை (1958-இல்) 8.5 லட்சம். இது 34 மாவட்டங்களைக் கொண்டது. நாட்டின் மூன்றில் ஒரு பகுதியில் வனங்கள் நிறைந்திருக்கின்றன. மக்கள் இந்து மதத்தையும், பெளத்த தர்மத்தையும் பின்பற்றுபவர்கள். மதம் மாற்றுதலும், பசுவதையும் அங்கே சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கின்றன. இம்மலை நாட்டில் வீரமாகப் போரிடக் கூடிய வகுப்பினர் அதிகம். நேப்பாளத்துக் கூர்க்கசிப்பாய்கள் இந்திய இராணுவத்திலும், பிரிட்டிஷ் இராணுவத்திலும் இருக்கின்றனர். பூர்வ சரித்திரம், சமயம், கலைப்பண்பு முதலியவற்றில் நேப்பாளத்திற்கு இந்தியாவுடனேயே தொடர்பு அதிகம். இன்றும் நேப்பாளிய மக்கள் இந்தியரும் தாமும் ஒரே நாட்டவர் என்றே கருதுகின்றனர்.

நேப்பாளத்தின் தலைநகரான காட்மாண்டு இந்திய எல்லையிலிருந்து 75 மைல் துரத்திலுள்ளது. இங்கே பசுபதிநாதர் ஆலயம் இருப்பதால், இது இந்துக்களுக்குப் பெரிய ஷேத்திரமாகும். பற்பல இந்து,

21