பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 திபேத்து சீனர் வசம் இல்லாதிருந்தால், அவர்கள் இந்திய எல்லைப் புறங்களில் படையெடுத்திருக்க முடியாது. சீனாவின் இந்தியப் படையெடுப்புக்குத் திபேத்து அடிமையானதுதான் வசதியாயிற்று.

திபேத்து அடிமையா யிருக்கும்வரை இந்தியாவுக்கும் ஆபத்து நீடித்திருக்கும். இந்தியாவின் சுதந்தரத்திற்குத் திபேத்தின் சுதந்தரம் பெரும் பாதுகாப்பாகும். இவையெல்லாம் உண்மையே யெனினும், திபேத்து விடுதலை பெறுவது எப்படி ? என்றைக்கும் திபேத்தைச் சீனா அடக்கி வைத்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டின் சுதந்தரத்திற்காக வல்லமை மிக்க பகைவரை எதிர்த்துப் பதினாயிரக்கணக்கான உயிரைப் பலி கொடுத்த திபேத்தியர் கை கட்டி வாய் புதைத்து நின்று கொண்டே யிருக்கமாட்டார்கள். திபேத்திய சுதந்தரத்திற்காகப் போரிடக்கூடிய வீர இளைஞர்கள் தப்பி வந்து தங்குவதற்கும், ஆயுதப் பயிற்சி செய்து கொள்வதற்கும், மற்ற வழிகளிலும் இந்தியா உதவி செய்வதாயிருந்தால், தர்மம் மறுபடி தலைதுாக்கும் : திபேத்தின் புதிய சரித்திரமும் ஆரம்பமாகும்.

திபேத்துக்குப் புதிய அரசியல் அமைப்பு

நாடுதுறந்து இந்தியாவில் தங்கியிருக்கும் புனிதத் தலாய் லாமா, 1963 மார்ச் 9-ந் தேதி எதிர்காலத்தில் திபேத்துக்குரிய அரசியல் அமைப்பைப் பிரகடனம் செய்துள்ளார். திபேத்தின் பழைய அரசியல் இந்தக் காலத்திற்கு ஏற்றதா யில்லாததாலும், எதிர்காலத்தில் திபேத்தின் வளர்ச்சிக்குத் தக்க முறையில் அதை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்பதாலும், இப்புது அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இப்புதிய அரசியல் அமைப்

243