பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பின்படி மக்களுக்கு வாக்குரிமை உண்டு. அரசாங்க வேலைகளைத் தேசியச் சட்டசபை கவனிக்கும். மடாலயங்கள், மற்றும் சமய நிறுவனங்களை யெல்லாம் கவனித்து நடத்துவதற்குத் தலாய் லாமா ஒரு சமயக் ‘கவுன்சி’லை நியமிப்பார். நாட்டு நிலங்கள் யாவும் அரசாங்கத்திற்கு உரியவை. அவைகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் அதற்காகக் குறிப்பிட்ட தீர்வை செலுத்தவேண்டும்.

பிரதம மந்திரியையும், மற்ற மந்திரிகளையும், உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகளையும், மாகாணக் கவர்னர்களையும் தலாய் லாமாவே நியமிப்பார். இதுபோல் அவருக்கு அரசாங்கத்தில் முக்கியமான வேறு அதிகாரங்களும் உண்டு.

நாட்டில் செல்வமும் உற்பத்திச் சாதனங்களும் சிலருடைய கையிலே குவிந்துவிடாமல், எல்லா மக்களுக்கும் பயன்படும் முறையில் பிரித்துக் கொடுக்கவும், குழந்தைகள் இளைஞர்களுக்குக் கல்வி புகட்டவும், மக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கவும் அரசியல் அமைப்பில் தக்க விதிகள் சேர்க்கப்பெற்றுள்ளன.

மொத்தத்தில் தலாய் லாமா வகுத்துள்ள புதிய அரசியல் அமைப்பைத் திபேத்திய மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பார்கள். அது திபேத்தின் சரித்திரத்திற்கு ஏற்றபடியும், முன்னேற்றமாகவும், மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறையிலும் அமைந்துள்ளது. சீனாவிலே கூட மக்களுக்கு இவ்வளவு சுதந்தரம் கிடையாது.

ஆனால் நாடிழந்து நிற்கும் தலாய் லாமாவின் அரசியல் அமைப்பு எப்பொழுது அமலுக்கு வரமுடியும் என்றும், திபேத்தின் மீது கம்யூனிஸ்ட் சீனாவின் ஆதிக்கியம் எப்பொழுது ஒழியும் என்றும் சிலருக்கு ஐயம் தோன்றும். அல்ஜீரியா, சைப்ரஸ் முதலிய அடிமைப்

244