பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 பட்ட நாடுகளெல்லாம் விடுதலையடைந்துள்ள சமீப காலச் சரித்திரத்தை நன்கு கவனிப்பவர்களுக்குத் திபேத்தில் சீன நெடுங்காலம் வேரூன்றி நிலைக்க முடியாது என்பதை யூகித்துக் கொள்ள முடியும்.

இந்தியாவில் தங்கியிருக்கும் தலாய் லாமா அமெரிக்காவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று, தம் நாட்டின் நிலைமையை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தியாவும், மற்றும் பல நாடுகளும் திபேத்தின் சுயநிர்ணய உரிமைக்காக வாதாட வேண் டும். எதைச் செய்தாகிலும் திபேத்து முன்போல் சுதந்தர நாடாக விளங்கும்படி செய்யவேண்டும்.

245