பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/257

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெளத்த நூல்கள் சீன, ஜப்பான், மற்றும் கீழ்த் திசை நாடுகளிலும் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இந்த நாடுகளிலே இந்தியத் துறவிகள் நேரிலே சென்று பெளத்த தர்மப் பிரசாரம் செய்து வந்தனர். 1,400 ஆண்டுகளாகப் பெளத்த சமயம் ஜப்பானியர் வாழ்க்கையையும், உடைகள், வீடுகள், சமுதாய அமைப்பு முறைகள் , அரசியல், பொருளாதாரம், இலக்கியம், கலைகள் முதலியவற்றையும் உருவாக்கி வந்திருக்கின்றது. ஜப்பானிய சரித்திரத்திலிருந்து பெளத்த தர்மத்தைக் கழித்துவிட்டால், ஜப்பானியர் தங்களுக்குள் இடைவிடாது சண்டைகள் புரிந்து கொண்டு அநாகரிக நிலையில் தீவுகளில் வசித்துவந் திருப்பவர்கள் ' என்று புனித ரிரி நாகயரமா என்ற அறிஞர் கூறியுள்ளார். - " * * இந்த நூற்ருண்டிலே நம் காலத்திலே கூட, 1893இல் சுவாமி விவேகானந்தர் தனியாக அமெரிக்காவுக்கும், மேலை நாடுகளுக்கும் சென்று, மக்கள் உள்ளங்களைக் கலக்கி, ஆன்மிக வாழ்வின் ஒளியைப் பரப்பிவந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும். சங்கரருடைய அறிவும், புத்தருடைய இதயமும் பெறுவதே இலட்சியமா யிருக்கவேண்டும் என்பது விவேகானந்தருடைய ஆசை. குமரி முதல் இமயம் வரை சங்கநாதம் செய்து, செயற் கரிய செயல்கள் பலவற்றைச் செய்துவிட்டு 89 வய துக்குள் அவர் புகழுடம்பு எய்தினர். * கீழை நாடுகளில் இந்தியா, சீன, ஜப்பான் மூன் றுமே முக்கியமானவை. உலக ஜனத் தொகையில் பாதி இந் நாடுகளில் இருக்கின்றது. பொருட் செல் வத்தில் இந்தியாவும் சீனவும் மிகத் தாழ்ந்த நிலையி லுள்ளன. இன்று இந்தியா உலக நாடுகளுக்கு அபரித மாக ஏற்றுமதி செய்யக்கூடிய பொருள் அதன் வேதாந் தம்தான். சீன ஏற்றுமதி செய்யக்கூடியது அது புதி 847