பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாகக் கற்றுக் கொண்டுள்ள கம்யூனிஸம்தான் ! ஜப் பான் ஒன்று மட்டும் மேலைநாட்டு விஞ்ஞானத்தையும், தொழில் நுட்ப முறைகளையும் விரைவிலே கற்றுக் கொண்டு, நவீனமான பொருளாதார முன்னேற் றத்தை அடைந்துள்ளது. இந்தியாவும், சீனவும் இப்பொழுதுதான் விழிப்படைந்து, பெரிய அளவில் பெருந் தொழில்களை அமைக்க முன்வந்துள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடு, ஸோவியத் ரஷ்யா, ஜெர்மனி ஆகிய மேலே நாடு களுடன் இந்தியா, சீன ஜப்பான் நாடுகளும் சேர்ந்து உலகின் முதன்மையான ஆறு பெரிய வல்லரசுகளாக விளங்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. ஆனல் சீன, திமிர் ஒடுங்கி, ஒழுங்காக நடந்து வந்தால்தான். இது முடியும். ஜப்பான் காட்டும் வழி நவீன இயந்திரங்களை உபயோகித்து உற்பத்தி யைப் பெருக்கி, மேலை நாடுகளுடன் போட்டியிட்டு வென்ற முதல் ஆசிய நாடு ஜப்பான். 1905-இல் ஜப் பான் போரில் ரஷ்யாவை முறியடித்ததிலிருந்து ஆசிய நாடுகளில் தேசிய இயக்கங்கள் உரம் பெற்று வளரத் தொடங்கின. முக்கியமான நான்கு தீவுகளிலே நெருக்கமாக அடைக்கப் பெற்றிருந்த ஜப்பானிய மக் கள் முன்னேற்றமான நாடுகளிலிருந்து தொழில்களைக் கற்றுக்கொண்டனர். நாங்கள் இங்கிலாந்துக்குச் சென்று கப்பல் கட்டுதல், கடல் வாணிபம் ஆகிய தொழில்களைக் கற்ருேம். ஃபிரான்ஸிலுள்ள சட்டத் தைப் பார்த்து எங்கள் சட்டத்தை அமைத்துக்கொண் டோம் : அமெரிக்காவிட மிருந்து வர்த்தகம், பாங்கு முறைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டோம் : எங்களுக்கு வேண்டிய விஞ்ஞானம், மருத்துவ முறை 2.48