பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


களே ஜெர்மனியிட மிருந்து பெற்றுக் கொண்டோம், எங்கள் இராணுவத்தையும் அந்நாட்டு முறையிலே அமைத்துக்கொண்டோம். இருபத்தைந்து ஆண்டு களில், ஐரோப்பாவின் உதவி யில்லாமல், நாங்களே சுயேச்சையாகத் தொழில் புரிய முடிந்தது. அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் பெரிய வல்ல ராசாகிவிட்டோம் !" என்று ஒரு ஜப்பானியப் பிரமுகர் கூறியுள்ளார். ஜப்பானியரின் ஊக்கமும், சுறுசுறுப் பும், நிலையான கவனமும் விவசாயத்திலும், தொழில் களிலும் வெகு வேகமாக அவர்கள் வளர்ச்சிபெற உதவியுள்ளன. பெருந் தொழில்களுக்கு இயந்திரங்களும், உழைப் பாளர்களும் இருந்தால் மட்டும் போதாது ; தொழில் க்ளேப்பற்றி இடைவிடாமல் ஆராய்ச்சி செய்து முன் னேற்ற வழிகளை வகுக்கக்கூடிய ஆராய்ச்சிக் கூடங் களும் வேண்டும். ஜப்பானில் ஒவ்வொரு தொழிலிலும் இத்தகைய ஆராய்ச்சி நன்கு நடைபெறுகின்றது. அங்கு பெரிய கனரகத் தொழில்கள், ஆலைத் தொழில் களுடன், நடுத்தரமான தொழில்களும், குடிசைத் தொழில்களும் ஏராளமாக நடைபெறுகின்றன. கூடிய அளவுக்குச் சிறு இயந்திரங்களும் கருவிகளும் பயன் படுத்தப் பெறுகின்றன. சிறு தொழில்களே நிறுத்தவும் முடியவில்லை, பெருந் தொழில்களோடு சேர்க்கவும் முடியவில்லை. இதனல் ஜப்பானியத் தொழில்களுக்குப் போட்டி வெளி நாடுகளில் இல்லை, உள் நாட்டிலேயே இருக்கின்றது என்பார்கள். இரண்டாவது உலக யுத் தத்தில் பெரும் நஷ்டங்கள் ஏற்பட்டிருந்தும், 1945-க் குப் பின், 15 ஆண்டுகளுக்குள் ஜப்பான் மீண்டும் தொழில் வளர்ச்சி பெற்று விளங்குகின்றது. ஆசிய நாடுகளில் ஜப்பானுடன் இந்தியா அதிகத் தொடர்புகொண்டு, அதன் ஒத்துழைப்பைப் பெற்று 249