பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தால், இங்கும் விரைவிலே தொழில்வளர்ச்சி ஏற் படும். 1950-இலிருந்து இத்தகைய தொடர்பும், ஒத் துழைப்பும் ஏற்பட்டு வருகின்றன. விவசாயத்திலும் தொழில்களிலும் ஜப்பானிய நிபுணர்கள் இந்தியாவுக்கு வந்து தங்கியிருந்து இந்திய மக்களுக்குப் பயிற்சி யளிக் கின்றனர். நதியா, லம்பல்பூர், ஷாஹாபாத், சூரத் முதலிய இடங்களிலுள்ள ஜப்பானிய மாதிரி விவசாயப் பண்ணை களில் பயன்படுத்திக் காட்டுவதற்காக 90 வகை விவ சாயக் கருவிகள் வந்திருக்கின்றன. இந்தியாவில் கனி களில் வெட்டி யெடுத்த இரும்பு முதலிய பொருள்களை வாங்கிக்கொண்டு, ஜப்பான் உயர்தரமான உருக்கு இயந்திரங்களையும், மின்சாரத்தினல் ஒடும் ரயில்வே எஞ்சின்கள் முதலியவைகளையும் அனுப்பி வருகின்றது. ஆண்டுதோறும் சுமார் 57 கோடி பெறுமதியுள்ள பொருள்களை இந்தியா ஜப்பானுக்கு ஏற்றுமதி செய் தும், அத்தொகைக்குரிய பொருள்களை அங்கிருந்து இறக்குமதி செய்தும் வருகின்றது. இந்தியாவிலேயே தொழில்கள் நடத்துவதிலும் ஜப்பானிய மூலதனம் பெருகி வருகின்றது. ஆயினும் அந் நாடு பிரேஜில் முதலிய தென் அமெரிக்க நாடுகளில் போட்டிருக்கும் கோடிக்கணக்கான டாலர் மூலதன அளவு இந்தியா வில் போடவில்லை. அதற்குரிய வாய்ப்புக்களும், வரிச் சலுகைகளும் கிடைத்தால், ஜப்பானிய மூலதனத்தை இங்கு ஏராளமாக எதிர்பார்க்கல்ாம். மற்ற உதவிக ளோடு, ஜப்பான் நம் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கும் கோடிக்கணக்கான தொகை கடன் கொடுத்து உதவி புரிகின்றது. முன்பு நாம் சீனவை நம்பி, அதனுடன் கொண்டிருந்த உறவுக்குப் பதிலாக, நாம் ஜப்பா லுடன் அதிக நெருக்கமாய்ப் பழகுவது அவசியம் என்பதற்காகவே இங்கு முதலில் ஜப்பானைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். 250