பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இந்தியப் புரட்சி 1947-இல் இந்தியா விடுதலை பெற்றதுபோல ஆசியாவிலும், ஆப்பிரிகாவிலும் வேறு பல நாடுகள் விடுதலை யடைந்துள்ளன. இவைகளில் ஒன்றிரண்டு தவிர, பெரும்பாலானவை ஜனநாயக முறையில் குடி யரசுகளாக விளங்குகின்றன. இவைகளிலே எல்லா வகையிலும் பெரிய நாடு இந்தியா. ஆசியா முழுவதிலும் அரசியல், பொருளாதாரம், சமூகத்துறைகள் யாவற்றிலும் என்றுமில்லாத முறை யில் புரட்சி நடந்து வருகின்றது. இந்தியாவிலும், மாபெரும் தொழிற் புரட்சி நடந்து வருகின்றது. விவசாயம், தொழில்கள் முதலியவற்றில் அமைதி யான முறையில் மகத்தான மாறுதல் நடந்து வருகின் றது. வெள்ளத் தடுப்பு, பாசன வசதி, மின்சார உற் பத்தி, புதுக் குடியேற்றம் முதலிய பல வசதிகளே ஒருங்கே பெறும் வகையில், பெரிய ஆறுகள் பலவற் றில் மாபெரும் அணைகள் கட்டி முடிக்கப் பெற்றிருக் கின்றன; இன்னும் மக்கள் கட்டிக்கொண்டே யிருக் கின்றனர். முதல் பத்து ஆண்டுக் காலத்தில் இவுை களுக்காக ரூ. 1,200 கோடி முதல் &5 · 1,300 கோடி வரை செலவிடப் பட்டிருக்கின்றது. மானிட சமுகத் தின் நன்மைக்காக இவ்வாறு மக்கள் கூடி உழைக்கும் இடங்களே தமக்குக் க்ோயில்களாகவும், குருத்வாரங்க ளாக்வும், மாதா கோயில்களாகவும், பள்ளிகளாகவும் விளங்குவதாக இந்தியப் பிரதம மந்திரி திரு. நேரு கூறியுள்ளார். அணைகள் மட்டுமின்றி, ஆலைகளும், கனரகத் தொழில்களும் நாள் தோறும் பெருகி வரு கின்றன. r | + 1946-இல் மேட்டுர் அணையின் அதிசயத்தைக் கண்டு வியந்து கொண்டிருந்தோம். பின்னல் உலகிலேயே உயரமான பக்ரா அணையும், மிகவும் நீளமான ஹிராாகூட் 25 I