பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேகமாக வளரமுடியும் என்று சில பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். பொருளாதார சுதந் தரத்துடன் தனி மனிதர்களின் முயற்சியால் குறுகிய காலத்தில் பெருந்தொழில் வளர்ச்சி பெற்றுவிளங்கும். மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஹாலந்து, ஜப்பான் ஆகிய நாடுகளே அவர்கள் எடுத்துக் காட் டாகக் கூறுகின்றனர். 1963-க்கு முந்திய ஆறு ஆண்டுகளில் அந்நாடுகளில் தேசிய வருமானம் 49%லிருந்து 74% வரை வளர்ந்துள்ளது. கூலி விகிதங் களும் 25% லிருந்து 63% வரை வளர்ந்துள்ளன. விலை வாசிகளும் நிலையாக இருந்திருக்கின்றன; வேலையில் லாத் திண்டாட்டமும் அநேகமாக இல்லை எனலாம். அந் நாடுகளைப் போல் சமீபத்தில் ஸ்பெயினும், பிலிப் பைன் தீவுகளும் தனியார் முயற்சியில் மிகுந்த முன் னேற்றம் அட்ைந்துள்ளன. பூரணமான பொருளாதாரச் சுதந்தரத்திற்கு மாருக, பொருளாதார அமைப்பில் முழுவதையுமே அரசாங்கம் மேற்கொண்டு, எல்லாத் தொழில்களையும் நடத்திவரும் கம்யூனிஸ்ட் சர்வாதிகார முறை ஸ்ோவி யத் ரஷ்யாவிலும், சீனவிலும், மற்ற கம்யூனிஸ்ட் நாடுகளிலும் கையாளப்படுகின்றது. ரஷ்யாவில் தனி யார் துறை என்பதே இல்லை; எல்லாத் தொழில்களும் அரசாங்கத்தினல் பொதுத்துறையிலேயே அமைக்கப் பெற்றுள்ளன. முடிவில் இவ்வாறு அமைத்துக் கொள் வதே எல்லாக் கம்யூனிஸ்ட் நாடுகளின் திட்டமாகும். இந்திய அரசாங்கம் மேலே குறித்த இரண்டுக்கும் நடுவான பாதையை மேற்கொண்டுள்ளது. ஆளும் கட்சியாகிய காங்கிரஸ் நாட்டில் லோஷலிஸ்ப் பாணி யிலுள்ள சமுதாயத்தை அமைப்பதே தனது நோக்கம் என்று தீர்மானித்துள்ளது. ஸோஷலிஸம் என்பது என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கூரு 25 5