பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 மந்திரியான இரானாவின் ஆதிக்கியத்தை விரும்பவில்லை. மன்னர் விருப்பமும் மக்களின் எழுச்சியும் ஒன்று சேர்ந்தன. மன்னர் திரிபுவனர், தமது குடும்பத்துடன் காட்மாண்டுவிலிருந்த இந்திய ஸ்தானிகர் காரியாலயத்தின் உதவியால், இரகசியமாக இந்தியாவுக்கு வந்து, புது டில்லியில் தங்கியிருந்தார். அவரை ஆதரித்து எழுந்த மக்களின் திறமையாலும், சுதந்தர இந்தியாவின் உதவியாலும் நேப்பாளத்தில் இரானாக்களின் ஆட்சி ஒழிக்கப் பெற்றது. பின்னர் நேப்பாளத்துக்கு வெளியே வந்து 104 நாட்கள் தங்கியிருந்த மகாராஜா நேராகக் காட்மாண்டு சென்று பூரண ஆட்சிப் பொறுப்பையும் மேற்கொண்டார்.

மகேந்திர மகாராஜா இக்காலத்திய நிலைமைகளை யெல்லாம் அறிந்தவர். ‘உலகம் முழுதும் மாறிக் கொண்டே வருகின்றது; நடுவிலேயுள்ள நாம் நிலையாக நின்றுகொண்டேயிருக்க முடியாது’ என்பது அவர் கருத்து. நேப்பாளத்தில் புதிது புதிதான சாலைகளை அமைக்கவும், தொழில்களைப் பெருக்கவும், பல்கலைக் கழகம் அமைக்கவும், விவசாயத்தை விருத்தி செய்யவும், பாதுகாப்பைத் திருத்தியமைக்கவும் அவர் ஆர்வம் கொண்டுள்ளார். இத்துறைகளில் இந்தியா இயன்ற அளவு பொருளையும் நிபுணர்களையும் அனுப்பி உதவிபுரிந்து வருகின்றது.

திபேத்தில் நிலைபெற்றுள்ள சீனுவும் நேப்பாளத்துடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்றது. நேப்பாளப் பிரதம மந்திரி சமீபத்தில் சீனத் தலைநகரான பீகிங்குக்குச் சென்று சீன-நேப்பாள எல்லைபற்றி முடிவு செய்துகொண்டு வந்தார். அப்பொழுது இந்திய உள் நாட்டு மந்திரியாயிருந்த திரு. லால்பகதுர் சாஸ்திரியும் 1963, மார்ச் மாதத்தில் காட்மாண்டுக்குச் சென்று மன்னரையும், மந்திரிகளையும், மற்ற முக்கிய

23