பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபவம் உண்டு; அரசாங்கத்தின் பொதுத் துறையில் அத்தகைய அநுபவம் இல்லாதது பெருங் குறைதான். ஆயினும் எதிர்காலத்தில் பல்லாண்டுகளுக்கு-நீண்ட காலத்திற்கு-ஏற்ற திட்டங்களை அமைத்து நடத்து வதற்கும், இடையில் ஏற்படுகிற கஷ்ட நஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் குறிக்கோளை நிறைவேற்றுவதற் கும் அரசாங்கத்திற்கு உள்ள ஆற்றல் தனியார்களுக்கு இருக்க முடியாது. புகழ்பெற்ற பொருளாதார ஆசிரிய ரான ஜி. டி. எச். கோல் கூறியுள்ள அபிப்பிராயம் கவனிக் கத் தக்கது : 'இருபதாம் நூற்ருண்டின் நிலைமைகளில் மக்கள் அனைவருக்கும் தனியார் தொழில் முறை அதிக உதவி செய்ய முடியுமா, அல்லது பொருளாதாரக் கொள்கை சம்பந்தமான பெரும்பாலான விஷயங்களை அரசாங்கமும், அது அமைக்கும் தொழில் ஸ்தாபனங் களும் தங்கள் கையில் வைத்துக்கொள்வது அதிக உதவியாகுமா என்பதே அடிப்படையான விஷயம். கிடைக்கக்கூடிய உற்பத்திக்குரிய எல்லா வசதிகளையும் முழுதும் பயன்படுத்திக்கொள்ள இரண்டாவதாகச் சொல்லிய (அரசாங்கத்) துறையால்தான் இயலும் என்பதால், அதுவே விசேட நன்மையாகும். தேசிய நலனுக்குரிய மனித சக்தியோ, நிலமோ, பெரிய உற் பத்திக் கருவிகளோ எதுவும் பயனின்றி வீண்போகாது. பொருளாதாரத் துறைகளில் முக்கியமான கேந்திர ஸ்தானங்களில் அரசாங்க ஆதிக்கியம் இருந்தால், அத ல்ை வேலையில்லாத் திண்டாட்டம் அனைத்தையும் ஒழித்துவிடலாம். மக்களின் தேவைகளுக்கு ஏற்ற முறையில் பொருள் உற்பத்தியின் அளவையும், தன்மை யையும் உறுதி செய்ய முடியும். சோஷலிஸத்தின் நோக்கம் இந்தத் தொழிலைத் தேசியமாக்குவதா, அந் தத் தொழிலைத் தேசியமாக்குவதா என்று பார்ப்ப தன்று: சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கையை 260