பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தவை. நிலக்கரி வெட்டுதல், விமானப்போக்குவரத்து, குடியேற்ற நாடுகளில் தொழிற்சாலைகள் அமைத்த இலும், உணவுப் பொருள் உற்பத்தியும் அவ்வாறே அர சாங்கத்தின் கையிலுள்ளன. நாட்டின் தலைமையான 'பாங்க் ஆப் இங்கிலாந்து' ம் தேசியமாக்கப் பெற்றுள் ளது. ஆனல் போர்த் தளவாடங்களின் உற்பத்தி தனியார் வசம் விடப் பெற்றிருக்கிறது. தொழிற் கட்சியினரின் ஆட்சியில் பல தொழில்களையும் தேசிய மாக்க எண்ணியபோதிலும், மற்றைக் கட்சியினர் அதற்கு எதிர்ப்பாக இருந்தனர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் எல்லாத் தொழிe களும் தனியார் துறையிலேயே நடைபெறுகின்றன. போரினலோ, பொருளாதார நெருக்கடியாலோ, குறிப்பிட்ட கால அளவுக்கு அரசாங்கம் சில தொழில் களே மேற்கொண்டபோதிலும், பெரும்பாலாக அது தொழில்களில் தலையிடுவதில்லை. தலையிடுதல் ஜன நாயக இலட்சியத்திற்கு முரணானது என்றும் அங்கே கருதப்படுகின்றது. பொதுமக்களுக்கு உதவியாக அமைந்துள்ள தபால்-தந்தி, ரயில்வேக்கள் முதலிய சாதனங்கள், தேசத் தற்காப்புக்குரிய சில பொருள் களின் உற்பத்தி முதலியவையே பொதுத் துறையில் உள்ளன. 1923-ல் டெனஸ்ஸி நதிப் பள்ளத் தாக்கை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தால் அமைக் கப்பெற்ற குழு பல அணைகள் கட்டி, காடாகக் கிடந்த இடங்களை யெல்லாம் உணவுப் பொருள்களும், உலோ கப் பொருள்களும் கொழிக்கும் நாடாக மாற்றியுள் ளது. இந்த வேலைகள் பலவற்றில் அரசாங்க அதிகாரி களும் தனியார்களும் சேர்ந்து ஒத்துழைக்க வழி செய் யப்பட்டுள்ளது. பொதுவாக அமெரிக்கா மிகவும் முற்போக்கடைந்த நாடு. அந்த முற்போக்குக்கு நாட் டின் அமைப்பும், வரலாறும், அரசியலும் போன்ற பல 26.2