பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/275

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிறைவேறும்படி அமைக்கப்பெற்ற போதிலும், அந் தக் கால அளவுக்குள் பெரிய காரியங்கள் முற்றுப் பெறமாட்டா. ஒவ்வொரு திட்டமும் அடுத்த திட்டத் துடன் தொடர்புடையது: ஒன்றின் தொடர்ச்சி யாகவே மற்றதும், அதன் பின்னதும் நடந்து வருகின் றன. திட்டங்கள் பல நிறைவேறிய பின்பே மொத்தத் தில் முன்னேற்றத்தின் அளவைத் தெளிவாய்த் தெரிந்துகொள்ள முடியும். நிலக்கரிச் சுரங்கத்தின் பயன் உருக்கு ஆலை முதலியவை ஏற்பட்ட பிறகே தெரியும். இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற் சாலேயின் பயன், அந்த இயந்திரங்கள் நாடெங்கும் பரவி, பல தொழில்கள் வளர்ந்தாலே தெரியும். ஆயினும் இப்பொழுது நாம் கண்டு கொள்ளக்கூடியது நாடு எவ்வளவு வேகத்தில் முன்னேறி வருகிறது என் பதே இரண்டு, மூன்று நூற்ருண்டுகளாக உறங்கிக் கிடந்த நாடு விழித்தெழுந்துவிட்டது; தன் வல்லமை யைத் தெரிந்துகொண்டு வேகமாக முன்னேறியும் வருகிறது. இந்தியா விழித்தெழும் அசுரன் என்ற பெயரில் ஒர் அமெரிக்கர் புத்தகம் எழுதியுள்ளார். அசுரன் என்ற பெயரைப் பீமனைப் போன்ற மகா வல்லமையுள்ள மகாபுரு டன் என்ற கருத்திலேயே அவர் கூறியுள்ளார். ஆசியாவிலேயே செல்வம் கொழிக்கும் நாடாக இந்தியா முன்பு விளங்கியது. இடைக்காலத்தில் பல காரணங்களால் வளர்ச்சி தேங்கி, வறுமை மிஞ்சி விட்டது. மீண்டும் இந்நாடு பழைய உன்னத நிலையை அடைவதோடு, வெகு விரைவிலே உலகத்தின் முன் னணி நாடுகளில் ஒன்ருக விளங்கவும் முடியும்.கோடிக் கணக்கான மக்களின் வறுமையைப் போக்கவும், போதிய சத்துள்ள உணவுப் பொருள்கள் கிடைக்கவும், வருவாயைப் பெருக்கவும், வேலையில்லாத் திண்டாட் 26.5