பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டத்தை ஒழிக்கவும், வெளிநாடுகளுடன் சிறந்த முறை யில் வாணிபம் செய்யவும் நீண்ட காலத் திட்டங்கள் வகுத்து நிறைவேற்றுவதே வழி என்று இந்திய அர சாங்கம் தீர்மானித்ததில் வியப்பில்லை. திட்டங்களின் மூலம் ஸோவியத் ரஷ்யா மாபெரும் முன்னேற்ற மடைந்ததை உலகறியும். ஆனல் ரஷ்யாவுக்கும் இந்தி யாவுக்கும் சில வேற்றுமைகளும் உண்டு. 1917-இல் ரஷ்யா இருந்த நிலையிலேயே 1947-இல் இந்தியா பிற் போக்கான நிலையில் இருந்ததாக வைத்துக்கொள் வோம். ரஷ்யக் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு அள வற்ற அதிகாரம் இருந்தது. இந்திய அரசாங்கம் ஜன நாயக முறையில் அமைந்தது. ஆனல் ரஷ்யாவுக்கு வெளி நாடுகளின் உதவிகளில்லை; இந்தியாவுக்கு அவை ஏராளம். ரஷ்யாவே பல தொழில்களில் நமக்கு உதவி செய்து வருகின்றது. முதல் திட்டம் | நமது முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் 1951-ஆம் ஆண்டு வகுக்கப் பெற்றது. திட்டத்தின் பயன்களைத் தெரிந்து கொள்வதற்கு 1948-49இல் நம் தேசிய வரு மானம் எந்த இனங்களில், எவ்வளவு இருந்தது என் பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். 1948-இல் ஜனத் தொகை சுமார் 34 கோடி என்று வைத்துக் கொண்டால் ஒரு நபரின் சராசரி வருமானம் ரூ. 25 5 ஆகின்றது. கீழேயுள்ள கணக்கின்படி ஒன்பது கோடி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு, ரூ. 4, 150 கோடிக்குப் பொருளுற்பத்தி செய்திருக்கின்றனர். மொத்தத் தேசிய வருமானத்தில் 100-க்கு 48 பகுதி விவசாயத்திலிருந்தே கிடைத்திருக்கின்றது. சுரங்கம் முதலிய தொழில்களில் 80 லட்சம் அதிக நபர்கள் ஈடுபட்டிருந்தபோதிலும், அவைகளைவிட வர்த்தகம்