பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செலவுத் திட்டத்தில் வரவுக்கு மேல் செலவைக் கூடுத லாகக் காட்டியும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டி யிருந்தது. இத் திட்டத்தின்படி விவசாயத்திற்கும் கிராம சமுதாய நலனுக்குமாக ரூ. 2.99 கோடியும், அணைகள் முதலிய பாசன வசதிக்கும் மின்சார உற்பத் திக்குமாக ரூ. 585 கோடியும் செலவிடப்பட்டன. ஆனல் தொழில்களுக்கு ரூ. 100 கோடி மட்டும் செல விடப்பட்டது. விவசாயமே நாட்டின் அடிப்படைத் தொழிலா யிருப்பதாலும், முதலில் மக்களின் உணவுப் பிரசினைக்கு வழி செய்வது அவசியமாதலாலும், ஆரம்ப நிலையில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வ தற்கு விவசாய விளைபொருள்களே முக்கியமாதலாலும் விவசாயம்,பாசன வசதி, மின்சார உற்பத்தி ஆகியவை. களுக்காகப் பெருந் தொகை செலவு செய்யப்பெற் றுள்ளது. போக்குவரத்து வசதிகள் அமைக்க ரூ. 532 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாங்கத் தின் பொதுத் துறையில் ரூ. 2,000 கோடிக்குமேல் செலவிடப்பட்டது தனியார் தொழில்களுக்கும் பேரு தவியாகும். தனியார் தொழில்களுக்குக் கடன் வசதி முதலிய உதவிகள் செய்வதற்காக 1948-இல் தொழில் மூலதனக் கார்ப்பரேஷன் ஒன்றும், 1955-இல் ஒரு புதிய கார்ப்ப ரேஷனும் நிறுவப்பட்டுள்ளன. 1949-லேயே இந்திய ரிசர்வ் பாங்கு தேசியமாக்கப் பெற்றது. 1956-இல் இந்திய இம்பீரியல் பாங்கும் இந்திய ஸ்டேட் பாங்கு" என்ற பெயருடன் தேசியமாக்கப் பெற்றது. 1956-இல் இந்திய ஆயுள் இன்ஷாரன்ஸ் ' தொழில் தேசிய உடைமையாயிற்று. அதே ஆண்டில் வெளி நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்து நடத்த ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் அமைக்கப் பெற்றது. திட்டங்களுக்காக நமக்குப் பணமாகவும் இயந் 26 8