பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


மானவர்களையும் கண்டு கலந்து பேசிவிட்டு வந்தார். இடையிடையே இத்தகைய தொடர்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன.

சிக்கிம்

சிக்கிம் இராஜ்யத்திற்கும் சீனவின் திபேத் இராஜ்யத்திற்கும் இடையேயுள்ள எல்லை 140 மைலுக்கு மேலுள்ளது. சிக்கிமின் விஸ்தீரணம் 2, 81 8 சதுர மைல். 1961இல் மக்களின் தொகை 1, 61, 0.80. மக்களில் முக்கியமான வகுப்பினர் பூட்டியர், லெப்சர், நேப்பாளியர் எனினும், முக்கால் பகுதியினர் நேப்பாளியராவர். திபேத்தைப் போலவே இங்கும் மக்கள் பெளத்த தர்மத்தைச் சார்ந்தவர்கள். இங்கு ஏராளமான காடுகள் இருக்கின்றன. இந்நாடு மகாராஜாவின் ஆட்சியிலிருப்பினும், இதன் வெளிவிவகாரங்கள், பாதுகாப்பு, போக்குவரத்து முதலியவற்றின் பொறுப்பை உடன்படிக்கை மூலம் இந்திய அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி சிக்கிமின் தலைநகரான காங்டோக்கில் தங்கியிருக்கிறார்.

சிக்கிமுக்கும் திபேத்துக்கும் எப்பொழுதும் நெருங்கிய தொடர்புண்டு. திபேத்தியருக்கு ஆபத்தும் சங்கடமும் ஏற்படுகின்ற வேளைகளில் கூட்டம் கூட்டமான அகதிகளும், அரசியல்வாதிகளும் காங்டோக்குக்கு ஓடிவருவது வழக்கம். இந்தியாவின் சார்பில் திபேத்தியருடன் பேசவும் பழகவும் சிக்கிம் மகாராஜாவும், இளவரசரும் மிக்க உதவியாயிருந்து வந்தார்கள்.

சிக்கிம் இராஜ்யத்தின் உள்நாட்டு நிர்வாகத்திலும், வெளிவிவகாரங்களிலும் இந்தியாவின் நேரடியான சண்காணிப்பு உரிமையைச் சீன சர்க்கார் 1890லேயே அங்கீகரித்திருந்தது. இந்த ஒப்பந்தம் சிக்கிம்

24