பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/291

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாலிஸிகள் பெருவாரியாகச் சேருவதற்காகச் சில விதி கள் தளர்த்தப்பட்டுள்ளன. நாட்டுப்புறங்களிலும், தொழிலாளரிடையிலும் இன்ஷாரன்ஸ் முறை பரவு வதற்குத் தீவிர ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன. மொத்தத்தில் கார்ப்பரேஷன் மிகவும் இலாபகரமாக நடந்து வருகின்றது. அதன் நிதிகள் பொதுத் துறை யிலும் தனியார் துறையிலும் நடிந்து வரும் தொழில் களுக்கு உதவியாகக் கடகைக் கொடுக்கப் பெறு கின்றன. நாட்டை ஐந்து மண்டலங்களாக வகுத்துக் கொண்டு, ஐந்து மண்டலக் காரியாலயங்களுடனும்' முக்கியமான 33 இடங்களில் டிவிஷனல் ஆபீஸ்'க ளுடனும், 200 கிளே ஸ்தாபனங்களுடனும் கார்ப்ப ரேஷன் நடந்து வருகின்றது. 1961-இல் ரூ. 608 கோடிக்குப் புதிதாகத் தொழில் நடந்திருக்கின்றது. 1963, மார்ச் மாதம் முடிய 15 மாதங்களில் ரூ. 745 கோடிக்குப் புதுப் பாலிஸிகள் சேர்ந்துள்ளன. இது போதாதென்றும், இன்னும் பலவகையில் ஊக்கமளித் துத் தொழிலை வளர்க்க வேண்டுமென்றும், கார்ப்ப ரேஷனிடம் சேரக்கூடிய கோடிக்கணக்கான நிதியைக் கொண்டே திட்டங்களுக்குப் பெரிய அளவில் உதவி செய்ய முடியுமென்றும், அதனல் கட்டாயச் சேமிப்பு முதலிய முறைகளை அரசாங்கம் தவிர்க்க முடியுமென் றும் சமீபத்தில் 'ஹிந்து பத்திரிகை எழுதியுள்ளது. விமானப் போக்குவரத்து உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் விமான யாத்திரை செல்பவர்களுக்கு வசதி யளிக்கும் முறையில் விமானப் போக்குவரத்தை அரசாங்கமே மேற்கொள்ள நேர்ந்தது. முன்னல் அதை நடத்தி வந்த தனியார் கம்பெனிகள் சரிவர நிர்வகிக்க முடியவில்லை : ஆண்டுதோறும் அரசாங்கம் அவைகளுக்கு உதவித் தொகையும் அளித்துவர 281