பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதற்கும் வசதியாக இந்திய நிதிக் கார்ப்பரேஷன்” (ஐ. எப். ஸி.) அமைக்கப்பட் டிருக்கின்றது. இதில் மத்திய அரசாங்கம் ரூ. 1 கோடியும், ரிஸர்வ் பாங்கு ரூ. 1 கோடியும் மூலதனமாகப் போட்டிருக்கின்றன. ரூ. 10 கோடிவரை இது மூலதனமாகப் பெறலாம். மேலும் தேவைப்படும்போ தெல்லாம் இது ரிஸர்வ் பாங்கிலிருந்து பணம் பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பெற்றுள்ளது. தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம்: பீஹார், மேற்கு வங்காள ராஜ்யங்களில் பாயும் தாமோதர் நதியின் பள்ளத்தாக்கில் அணைகள் கட்டியும், வாய்க்கால்கள் வெட்டியும், மின்சார நிலையங்கள் அமைத்தும் அபி விருத்திகள் செய்ய 1948-இல் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் (டி. வி. ஸி.) நிறுவப்பெற்றது. இதற்குவேண்டிய மூலதனத்தை மத்திய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட இரு ராஜ்யங்களும் முதலீடு செய்ய ஏற்பாடாகியிருக்கிறது. தாமோதர் நதியும் அதன் கிளை நதிகளும் பாயும் படுகையின் பரப்பு 9,000 சதுர மைல். இந்தப் பிரதேசமே நம் நாட்டில் செல்வம் கொழிக்கும் தலை சிறந்த பிரதேசம். நம் நாட்டுக்குத் தேவையான உயர்தரமான செம்பு, இரும்பு, உலோகத் கனிகளும், நிலக்கரி, மைக்கா கனிகளும் அங்கிருப்பு தோடு, தொழில்களுக்கு உதவக்கூடிய சில வகைக் களிமண்களும் உள்ளன. தாமோதர் திட்டத்தின் நோக்கங்கள் வெள்ளத்தைத் தடுத்தல், பாசன வசதி, மின்சார உற்பத்தி ஆகியவை. தாமோதர் நதியிலும், அதன் கிளை நதிகளிலும் கோனர் திலையா, மெய்தோன், பஞ்செட் குன்று ஆகிய நான்கு இடங்களிலும் அணைகள் கட்டுதலும், பிந்திய மூன்றிலும் தண்ணிரின் உதவி கொண்டு இயங்கும் மூன்று மின்சார நிலையங்களும், பொகாரோவிலும் துர்க்காபூரிலும் இரண்டு அனல் 288