பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் ஏற்பட்டிருப்பதுடன், பெருமையும் உண்டு. இதுபற்றி, நம் கனவு நனவாகத் தொடங்கியிருப்ப தாக இந்தியப் பிரதம மந்திரி குறிப்பிட்டுள்ளார். டில்லியிலே குதுப்மினருக்கு அருகில் நிறுத்தப்பட் டுள்ள அற்புதமான 6 டன் எடையுள்ள இரும்புத் துணை 1,600 ஆண்டுகளுக்கு முன்பே வார்த்தெடுத்த இந்தியா இப்பொழுதுதான் பெரிய அளவில் உருக்கு உற்பத்தியை மேற்கொண்டிருக்கின்றது. நாட்டில் இரும்பு, உருக்கு உற்பத்திக்குத் தக்க அடிப்படை அமைத்து வழிகோலிய பெரியார் ஜாம்ஷெட்ஜி டாட்டா. நவீன முறையில் இரும்பை உருக்கு தல் ஜாம்ஷெட்பூர் டாட்டா தொழிற்சாலையில் 1911-ல்தான் ஆரம்பமாயிற்று. இப்பொழுது டாட்டா அயர்ன் ஸ்டீல் தொழிற்சாலையில் வருடந்தோறும் 15 லட்சம் டன் பூர்த்தியான உருக்கும், உருக்குக் கட்டி கள் 20 லட்சம் டன்னும், இந்தியன் அயர்ன் ஸ்டீல் தொழிற்சாலையில் பூர்த்தியான உருக்கு 8 லட்சம் டன்னும், உருக்குக் கட்டிகள் 10 லட்சம் டன்னும், இரும்புப் பாளங்கள் 4 லட்சம் டன்னும், மைசூர் அயர்ன் ஸ்டீல் தொழிற்சாலையில் பூர்த்தியான உருக்கு 1 லட்சம் டன்னும் உற்பத்தி செய்ய வசதிகள் அமைந் துள்ளன. அரசாங்கப் பொதுத் துறையில் ஐந்தாண்டுத் திட்டங்களின்படி ஹிந்துஸ்தான் ஸ்டீல் கம்பெனி மூன்று பெரிய தொழிற்சாலைகளை ரூர்கேலா, பிலாய், துர்க்காபூர் ஆகிய இடங்களில் அமைத்துள்ளது. (இவை முறையே ஒரிஸா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங் காள இராஜ்யங்களில் உள்ளன). மூன்று தொழிற் சாலைகளுக்கும், அவைகளுக்கான நகரமைப்பு முதலிய வற்றிற்குமாக உத்தேசிக்கப்பட்ட செலவு ரூ. 55.8 கோடி. ரூர்கேலா தொழிற்சாலை மேற்கு ஜெர்மனி 286