பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருடம் சிறையில் வைக்கப்பட்டார். அவர் சிறை புகுந்ததுமே அவர் நிறுவிய சுதேசிக் கப்பல் கம்பெனி யும் முறிந்துவிட்டது. ஆயினும் முதல் சுதேசிக் கப்பல் ஒட்டி வழிகாட்டியவர் கப்பலோட்டிய தமிழ் வீரரே யாவர். கப்பல் கட்டும் தொழிலே இந்தியாவில் இல் லாமற் போய்விட்டது. 1941-இல் ஸிந்தியா கம்பெனி யார் முதன்முதலில் அத்தொழிலை மேற்கொண்டனர் : விசாகப்பட்டினத்தில் தொழிற்சாலையும் அமைந்தது. 1948-இல் அங்கு கட்டப் பெற்ற 8,000 டன் கப்பலர்ன 'ஜல உஷா கடல் யாத்திரைக்கு அனுப்பப் பெற் ДD 35/ • m விசாகப்பட்டினத்தில் நடந்து வந்த கப்பல் கட்டும் தொழிலை 1952-இல் இந்திய அரசாங்கம் மேற் கொண்டு, அதற்காக ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு கம் பெனியை நிறுவிற்று. கம்பெனிப் பங்குகளில் 100-க்கு 78 அரசாங்கத்திற்கும், 22 சிந்தியா கம்பெனிக்கும் உரியவை. ஆரம்ப வேலைக்காக அரசாங்கம் ரூ. 2 கோடி அளித்தது. மேற்கொண்டும் முதலீடு செய்து தொழிலை வளர்க்க ஏற்பாடாகி வருகின்றது. தொழிற் சாலையில் அந்நிய நிபுணர்கள் மிகச் சிலரே : பெரும் பாலும் இந்தியரே எல்லா வேலைகளையும் நடத்தி வரு கின்றனர். சாதாரணமாக ஒரு பெரிய கப்பல் கட்டு வதற்கு இங்கு 20 மாதக் காலமாகிறது. ஜெர்மனியில் 15 மாதங்களில் முடிக்கிரு.ர்களாம். எல்லாச் சாமான் களும் உடனுக்குடன் கிடைப்பதானால், இங்கும் விரை வில் முடிக்க முடியும். ஆனல் கப்பல் கட்டுவதற்குத் தேவையான தனித் தேனிரும்பு உறுப்புக்கள் முதலிய வையும், சில்லறைச் சாமான்களும் வெளிநாடுகளி லிருந்து வரவேண்டி யிருக்கிறது. சொற்ப அளவில் தேவைப்படும் இந்த உறுப்புக்களில் பலவற்றையும் நம் உருக்கு ஆலைகளிலேயே தயாரிக்க முடியும் என்ரு லும், 2.95