பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/306

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெரிய அளவில் நடைபெறும் அவைகளின் வேலைக்குப் பாதகமாகும். ஹிந்துஸ்தான் ஷிப்யார்டில் ஆண்டுக்கு நான்கு கப்பல்கள் கட்டி முடிக்க முடியும் எனினும், இப்பொழு துள்ள வேகத்தில் 2; கப்பல்கள் வீதமே தயாராகின் றன. எனவே நமக்கு அவசரமாகத் தேவையுள்ள கப்பல்களை நாம் வெளி நாடுகளில் கட்ட ஏற்பாடு செய்தும், பழைய கப்பல்களை விலைக்கு வாங்கியும் ஒட்ட வேண்டியிருக்கின்றது. 1947-இல் இந்தியாவில் 28 லட்சம் டன் கப்பல் களே யிருந்தன. 1960-இல் ஒடிக்கொண்டிருந்த கப்பல் கள் 173, 82 வெளி நாடுகளுக்குச் சென்று வரவும், 91 கடலோர வாணிபத்திற்கும் பயன்பட்டு வந்தன. இப்ர்ெழுது 10 லட்சம் டன் கப்பல்கள் இருக்கின் றன. இவை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலாய், ஜப்பான், தென் அமெரிக்கா முதலிய பல நாடுகளுக் கும் சென்றுவருகின்றன. எனினும் நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களிலும், இறக்குமதி செய்யும் பொருள்களிலும் சுமார் பத்தில் ஒரு பகுதிதான் நம் சொந்தக் கப்பல்களில் வந்து போகின்றன. வெளி நாட்டுக் கப்பல்களுக்குக் கூலி கொடுப்பதில் கோடிக் கணக்கான பணம் செலவாகின்றது; அத்துடன் வெளி நாணயங்களில் நமது சேமிப்பும் குறைகின்றது. 1961 இல் சுத்தம் செய்யப் பெருத பெட்ரோலிய இறக்குமதிக்கு மட்டும் இந்தியா சுமார் ரூ. 58 கோடி கப்பல் கூலி கொடுத்திருக்கிறது. முதலாவது திட்டத்தின்படி 4, 80,000 டன் இந் தியக் கப்பல்களுக்கு ஏற்பாடு செய்யப்பெற்றது. இந் தியக் கப்பல் கம்பெனிக்குக் கடனுதவி செய்வதற்கு ரூ. 18, 70,00,000 செலவாகி யிருக்கின்றது. இரண்டாவது திட்டத்தின்படி 9 லட்சம் டன் 2 Ꮽ Ꮾ