பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/307

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கப்பல்கள் இருந்தன : ரூ. 54; கோடி செலவா யிற்று. அடுத்த திட்டத்தில் 1965-66-க்குள் 14, 20,000 டன் கப்பல்கள் வேண்டுமென்றும், இவைகளில் 10, 80,000 டன் கப்பல்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வும், 3,40,000 டன் கப்பல்கள் இந்தியக் கரையோர வர்த்தகத்திற்கு உதவவும் தீர்மானிக்கப் பெற்றிருக் கிறது. இதற்கு ரூ. 55 கோடி செலவாகும். கப்பல் போக்குவரத்து அபிவிருத்தி நிதியிலிருந்து ரூ. 4 கோடியும், கப்பல் கம்பெனிகளே முதலீடு செய்யும் ரூ. 7 கோடியும் இதற்குப் பயன்படும். நமது தேவைக்கும், கப்பல்களை நாம் பெருக்கி வரும் வேகத்திற்கும் வெகு தூரம் இருக்கின்றது. ஆயினும் இந்தியா இத்துறையில் முன்னேற்றப் பாதை யில் முனைந்துள்ளது என்பதுதான் மகிழ்ச்சிக்குரிய விஷயம். எண்ணெய் ஏற்றிவரக்கூடிய 'டாங்கர்’ என்ற கப்பல் நம்மிடம் ஒன்றுதான் உள்ளது. உலோ கங்கள், தானியங்கள், இரசாயன உரங்கள் முதலிய வற்றைச் சுமந்து செல்லக்கூடிய டிராம்ப்' வகைக் கப்பல்கள் நமக்கு ஏராளமாகத் தேவை. ஜப்பான், ருமேனியா, லெக்கோஸ்லோவேகியா முதலிய நாடு களுக்குக் கனிகளிலிருந்து எடுத்த இரும்பு அனுப்பு வதற்கு அரசாங்கம் ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றது. இரண்டு, மூன்று ஆண்டுகளில் நமது ஏற்றுமதி ஆண் டுக்கு 100 லட்சம் டன்னுக்கு வரக்கூடும். ஆயினும் நம்மிடம் போதுமான கப்பல்களில்லை. கப்பல்களும், விமானங்களும் க ைடத் தெரு க் களி ல் கிடைக்க மாட்டா. பிற நாடுகளிலும் முன்னதாகச் செய்து விற்பனைக்குத் தயாராக வைத்திருக்க மாட்டார்கள். இவ்விஷயத்தில் நம் நாடு படிப்படியாகவே முன்னேற வேண்டியிருக்கின்றது. 29 7