பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 நேர்ந்தது. ஆனால் சீன அதிகாரிகள் அதற்கு இடம் கொடுக்கவே மறுத்துவிட்டனர். சிக்கிம், பூட்டானின் எல்லைகள் இந்திய-திபேத்து எல்லையோடு தொடர்புள்ளவை. அவைகளைப் பற்றிப் பேச இந்தியாவுக்குத் தான் உரிமையுண்டு. எனினும் சீனர் தம் பிடிவாதத்தை விடவில்லை.

சூ என்-லாய் டில்லியிலிருந்த பொழுது ஏப்ரல் 25இல் பத்திரிகை நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில், பூட்டான், சிக்கிமுடன் இந்தியாவுக்குள்ள சம்பந்தத்தைச் சீனா மதிக்கின்றது என்று தெளிவாகக் கூறியிருந்தார். பல நிருபர்கள் இதை உடனே குறித்து வைத்திருக்கிறார்கள். சீனப் பிரதமரின் பேச்சு முழுதும் ஒலிப்பதிவு செய்தும் வைக்கப் பெற்றுள்ளது. இத்தனையிருந்தும், அவரும், சீன அதிகாரிகளும் பின்னல் மாறிப் பேசத் தொடங்கிவிட்டனர். சீனப் பத்திரிகைகள் மந்திரியின் கூற்றில் ‘சம்பந்தத்தை’ என்ற சொல்லை ‘நியாயமான சம்பந்தத்தை’ என்று திரித்து வெளியிட்டன. இந்தியா எடுத்துக்காட்டும் உறவுகள் யாவும் நியாயமற்றவை என்று பின்னால் மறுத்து விடுவதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது என்பது தெளிவு.

1960, செப்டம்பர் 22-ந் தேதி சீனக் காவற்படை ஒன்றும், 1961இல் சீனர் கூட்டம் ஒன்றும் ஜெலெப் லா கணவாயைத் தாண்டி சிக்கிம் நாட்டில் நுழைந்தன. இவைகளைப் பற்றி இந்திய அரசாங்கம் ஆட்சேபம் தெரிவித்தது.

நடுப் பகுதி

திபேத்து-இந்திய எல்லையின் நடுப்பகுதி இந்தியாவின் வட பகுதியிலுள்ள உத்தரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மூன்று ராஜ்யங்களின்

27