பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/310

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விமானங்களும், ஃபைட்டர் விமானங்களும் நமக்கு ஏராளமாகத் தேவை. சில எம். ஐ. ஜி. 21 விமானங் களே ரஷ்யாவிடம் பெற்றுக் கொண்டதுடன் ரஷ்ய நிபுணர்களின் உதவியுடன், அவைகளை இங்கேயே உற்பத்தி செய்யவும் ஏற்பாடாகி வருகிறது. பெரிய வல்லரசுகள் அணுகுண்டுகளையும், ஏ வுகணைகளையும் உற்பத்தி செய்வதில் ஈடுபட்டிருந்தபோதிலும், குறுகிய எல்லைகளுக்குள் நடைபெறும் போர்களுக்கு விமானங் கள் இன்னும் தேவையாகவே உள்ளன. நம்முடைய முக்கிய எதிரியாக விளங்கும் சீனவிடம் 700 இலியுவின் பாம்பர்களும், 2,000 ஃபைட்டர் விமானங்களும் இருப்பதாகத் தெரிகின்றது. இந்நிலையில் இந்தியாவும் விரைவில் விமானங் களைப் பெருக்கிக் கொள்ளல் அவசியமாகும். - H உலகில் விமான உற்பத்தி ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய சில இடங்களிலேயே மிகுதியாக நடைபெறுகின்றது. தற்கால விமானத் திற்கு ஒரு பெரிய கப்பலின் விலையாகிறது. சொற்ப விமானங்களை மட்டும் வாங்கினலும், உற்பத்தி செய் தாலும், விலை அதிகமாகும். நூற்றுக் கணக்கில் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்தால்தான் செலவு குறைவா யிருக்கும். இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி : இது ரூ. 4 கோடி மூலதனமுள்ளது. இதன் பங்குகளில் பெரும்பாலானவை மத்திய அரசாங்கத்திற்கு உரி யவை. சராசரியாக இதன் தொழிற்சாலையில் ஆண்டு தோறும் 50,000 டெலிபோன்களும், 35,000 எக் சேஞ்சு லைன்களும், மற்றும் தொலைபேசிகளுக்குத் தேவையான பொருள்களும் உற்பத்தி செய்யப்பெறு கின்றன. நாட்டில் நல்ல முறையில் பணி செய்து வரும் தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்று. இங்குள்ள Ꮽ00