பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொழிலுாளர் நலனும் மிகவும் கவனிக்கப் பெறு கின்றது. - இங்கிலாந்திலுள்ள ஸ்டாண்டர்ட் டெலிபோன்ஸ் கம்பெனி இத்துடன் ஒத்துழைத்து வருகின்றது. இத் தொழிற்சாலை நம் தபால் தந்தி நிலையங்களுக்குத் தேவையான டெலிபோன் ரிஸிவர், எக்ஸ்சேஞ்சு கருவி கள் யாவற்றையும் அளித்து வருவதுடன், ரயில்வேக் களுக்குத் தேவையான ஸிக்னலிங் கருவிகளையும் தயாரிக்கின்றது. இதற்கு மேலும் ரூ. 3 கோடி முதலீடு செய்யவும், 1965-66-க்குள் வருடத்திற்கு 1,80,000 டெலிபோன்கள் வீதம் தயாரிக்கவும் திட்ட மிடப் பட்டிருக்கின்றது. பாரத் எலக்டிரானிக்ஸ் கம்பெனி ஹாலந்து நாட்டு பிலிப்ஸ் கம்பெனியின் ஒத்துழைப்புடன் இதன் தொழிற் சாலையில் மின்சாரக் கருவிகளும், வாகுவம் வால்வுகள், டிரான்ஸிஸ்டர்கள், கம்பியில்லாத் தந்திக்குரிய கருவி கள், ரேடியோவுக்கு வேண்டிய உறுப்புக்கள் முதலிய பலவிதப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அரசாங் கத்திற்குத் தேவையான பொருள்களோடு, ரேடியோ பெட்டிகள், கை ரேடியோக்கள் தயாரிப்பவர்களுக்கு வேண்டிய உறுப்புக்களையும் இத் தொழிற்சாலை அளிக்க முடியும். 1959-60 வரை இதில் ரூ. 5, 31,00,000 முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதர கம்பெனிகள் சர்வே கருவிகளும், விஞ்ஞானக் கருவிகளும் உற் பத்தி செய்யக் கல்கத்தாவில் ரூ. 3 கோடி மூலதன அள வுள்ள கம்பெனி ஒன்று நடந்து வருகின்றது. மத்தியப் பிரதேசத்தில் போபால் நகரில் ரூ. 30 கோடி மூலதன அளவுடன் மின்சாரக் கருவிகள் தயாரிக்கும் தொழிற் சாலை அமைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு ஆங்கில 30 I