பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாபெரும் அணைகள் -- பாக்ரா அணை நாடு விடுதலையடைந்தவுடன் தொடங்கப் பெற்ற பெரிய வேலைகளில் பாக்ரா அணை, ஹிரா கூட் அணை முதலியவை குறிப்பிடத் தக்கவை. இத்தகைய அணைகளுக்குப் பெரும் பொருளும் நீண்ட காலமும் தேவை. ரூ. 170 கோடிச் செலவில் சட் லெஜ் நதியில் பாக்ரா அணை கட்டி முடிக்கப் பெற்றி ருக்கின்றது. இது முற்றிலும் காங்கிரீட்டில் அமைந் தது. அடிப்படையிலிருந்து இதன் உயரம் 740 அடி. அடியில் இதன் நீளம் 325 அடிதான். ஆனல் உச்சி யில் நீளம் 1,700 அடி. அடியில் 625 அடி அகலமா யுள்ள இந்த அணை, மேலே போகப்போக ஒடுங்கி 30 அடி அகலத்திலுள்ளது. மொத்தம் போடப்பட்டி ருக்கும் கான்கிரீட் 14,30,00,000 கன அடி. இந்த அணையில் தேங்கும் தண்ணிர் 35 லட்சம் ஏக்கர் நிலங் களுக்குப் பயன்படக்கூடியது. இதல்ை பஞ்சாபிலும் ராஜஸ்தானிலும் 10 லட்சம் டன் உணவுத் தானியங் களும், 8 லட்சம் பேல் பருத்தியும், 5 லட்சம் டன் கரும்பும் விளையும் அணையிலும், அதிலிருந்து செல் லும் நங்கல் கால்வாயிலும் முறையே 8, 10,000 கிலோ வாட்டுகளும், 1,44,000 கிலோவாட்டுகளும் மின்சார சக்தி உற்பத்தி செய்ய முடியும். பாக்ரா அணை உலகி லேயே அதிக உயரமான அணையாகும். ரீஹண்டு அணை உத்தரப் பிரதேசத்தில் அதிக விளைவில்லாத பகுதியில் ரீஹண்டு நதியில் இந்த அணை கட்டப் பெற்றுள்ளது. ரீஹண்டு விந்திய மலையி லிருந்து பாயும் ஒரு சிறிய ஆறு. 3,250 அடி நீளமும், 300 அடி உயரமும் கொண்ட இதன் காங்கிரீட் அணே யால் 180 சதுர மைல் அளவுக்குத் தண்ணிர் தேக்கப் பெறுகின்றது. இந்தியாவில் இவ்வளவு பரப்புள்ள நீர்த்தேக்கம் வேறில்லை. சுற்றிலும் மலைப்பிரதேசமா 3 04