பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/317

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஏக்கர் நிலங்களில் பயிர் செய்ய உதவியாகும். ஆந்தி ராவில் எப்பொழுதுமே பஞ்ச நிலையிலுள்ள ராயல சீமைப் பகுதிக்கு இதனால் விமோசன முண்டாகும். இந்த அணையினல் ஏற்படும் மாபெரும் ஏரிக்கு, பழம் பெருமையின் நினைவாக, நாகார்ஜுன சாகர் என்று பெயர் வைக்கப்பெறும். ஆனல் பழம் பெரு நகரா யிருந்த விஜயபுரி மீண்டும் ஏரிக்கடியில் மூழ்கிவிட நேர்ந்துள்ளது. அந்தப் பகுதியில் பூமியிலிருந்து கண்டெடுக்கப் பெற்ற அரிய பொருள்கள், பலவற்றையும் அருகி லுள்ள நாகார்ஜுன கொண்டா என்ற குன்றில் அமைக்கப்பெறும் காட்சிச் சாலையில் வைக்க ஏற் பாடாகி யிருக்கிறது. நாகார்ஜுன சாகருக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள செலவு ரூ. 137 கோடியாகும். முதலில் இது ரூ. 75 கோடியென்று கருதப்பட்டது. துங்கபத்திரா அணை : 7,942 அடி நீளம் காரைக் கட்டுள்ள அணை இது: உயரம் 162 அடி. இதற்கு உத்தேசச் செலவு ரூ. 60 கோடி, அணை 1953-54 லேயே கட்டி முடிந்திருந்தும், கால்வாய்கள் வெட்ட நாளாகி விட்டது. முதலில் 8 லட்சம் ஏக்கருக்கும், பின்னல் 12 லட்சம் ஏக்கருக்கும் தண்ணிரளிக்க உத் தேசிக்கப்பட்டிருக்கிறது. ஹிராகூட் அண : ஒரிஸா ராஜ்யத்திலுள்ள இந்த அணையில் முதற்பகுதி வேலை முடிந்திருக்கிறது. உத் தேசச் செலவு ரூ. 100 கோடியில், ரூ 71 கோடிப் பகுதி நிறைவேறியிருக்கிறது. சிப்லிமா மின்சார நிலையமும், பாசன அபிவிருத்தி ஏற்பாடுகளும் முடிய வேண்டும். ஹிரா கூட் அணையின் உயரம் 200 அடி, நீளம் 3. மைல். இது காங்கிரீட், அல்லது மண்ணுல் இல்லாமல், 307