பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலப்பு முறையில் கட்டப் பெற்றது. மண்கரைகள் மட்டும் 13 மைல்கள் போடவேண்டி யிருந்தது. இந்த அணையின் பயனக 40 லட்சம் ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணிர் கிடைப்பதுடன், 2, 79,000 கிலோவாட்டு கள் மின்சார சக்தியும் உற்பத்தியாகும். சம்பல் பள்ளத்தாக்குத் திட்டம் : ரூ. 100 கோடிச் செலவில் மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் 14-லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி செய்ய ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. 2, 10,000 கிலோ வாட்டுகள் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். காந்திசாகர் அணை, ரான பிரதாப் சாகா அணை மற்றும் இரண்டு சிறு அணைகளும் கட்டவேண்டிய பெரிய திட்டம் இது. ராஜஸ்தான் கால்வாய் : பஞ்சாபில் சட்லெஜ் நதியும் பியாஸ் நதியும் சேருமிடத்திலிருந்து சிறிது தூரத்தி லுள்ள ஹரைக் அணையிலிருந்து 425 மைல் நீளத் திற்குக் கால்வாய் வெட்டி ராஜஸ்தானுக்குத் தண் ணtர் கொண்டு செல்லப்படுகின்றது. அக் கால்வாயின் அகலம் 134-அடி, ஆழம் 21-அடி. பாசனத்திற்காக உலகிலே இவ்வளவு பெரிய கால்வாய் வேறில்லை. ராஜஸ்தானிலுள்ள பாலைவனப் பிரதேசத்தை விவசா யப் பண்ணைகளாகச் செழிக்கச் செய்ய இந்தக் கால்வாய் மிகுந்த பயனுள்ளதாகும். இந்தக் கால் வாய்க்கு முதலில் உத்தேசிக்கப்பட்ட செலவு ரூ. 67 கோடி. ஆனல் மொத்தம் ரூ. 200 கோடி ஆகியிருக் கிறது. -- பால் பண்ணையில் ஒரு புதுமை மாபெரும் தொழிற்சாலைகளும், அணைகளும் பெருகி வருவதோடு, மக்களின் மனப்பான்மையிலும் பெரிய மாறுதல் ஏற்பட்டு வருவதற்குக் கெய்ரா மாவட் 3.08