பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டத்தில் நடைபெறும் கூட்டுறவுப் பால் பண்ணையை ஒர் உதாரணமாகச் சொல்லலாம். நம் நாட்டுப்புறங் களில் நேர்மையும் திறமையுமுள்ள தலைவர்களும், உற்சாகமுள்ள மக்களும் சேர்ந்து வேலை செய்தால், நாடு வெகு விரைவாக முன்னேற முடியும் என்பதை யும் இப்பண்ணை காட்டுகின்றது. இது 1948-இல் தொடங்கப்பெற்றது. இதில் 138 கிராமக் கூட்டுறவுச் சங்கங்கள் சேர்ந்திருக்கின்றன. மொத்த அங்கத்தினர் தொகை 40, 000. அவர்களிட முள்ள பால் கறக்கும் எருமைகள் 56,000. நாள் தோறும் பண்ணைக்கு வந்து சேரும் பாலின் அளவு கோடைக் காலத்தில் 1 லட்சம் பவுண்டு, மழைக் காலத்தில் 2; லட்சம் பவுண்டு. அன்றன்று விற்பனையாகும் பால் போக, மீதமுள்ள பால் அனைத்தும் இயந்திர உதவியால் பால் பொடி யாகவும், வேறு இனிய பொருள்களாகவும் செய்யப் பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப் பெறுகின்றன. அங்கு தயாராகும் பால் பொடிதான் நாடெங்கும் விற்று வரும் அமுல்' பால் பொடி டின்களில் உள்ளது. இக்காலத்துச் சுகாதார முறைகளின்படி, நவீன இயந்திர சாதனங்களுடன், கூட்டுறவு முயற்சியில் இப்படி ஒரு பண்ணை நடப்பன் த நாட்டின் மற்றைப் பகுதிகளிலுள்ள மக்களும் பின்பற்றி ஆங்காங்கே பண்ணைகள் நடத்துதல் நலமாகும். கெய்ரா மாவட்டப் பால் பண்ணை யூனியனின் பங்கு மூலதனம் ரூ. 4, 68, 200. 1957-58-இல் அதற்கு ரூ. 10, 46,000 இலாபம் கிடைத்திருக்கின்றது. ஆண்டுதோறும் ரூ. 2 கோடிக்குக் குறையாமல் விற்பனை நடைபெறுகின்றது. சைக்கிள் தொழில் : இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 13, 7,000 சைக்கிள்கள் தயாராயின. 309