பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது திட்டத்தின் முடிவில் ஆண்டுக்கு 2,06,00,000 டன் சிமிண்டு உற்பத்தியாக வேண்டும் என்பது நம் திட்டக் கமிஷனின் முடிவு. நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் நான்காவது திட்டம் தயாரித்தவுடனேயே பாகிஸ்தானின் படையெடுப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது எனினும் நம் திட்டத்தில் போர்த் தளவாடங்கள், கருவிகளுக் காகப் பெரும் மாறுதல்கள் செய்ய நேரும். ஏனெனில், நாட்டின் கெளரவத்தையும், சுதந்தரத்தையும் பாது காப்பதே எந்தந் திட்டத்திலும் முதலிடம் பெறும். தற்கால நிலைமைகளை ஒட்டிக் கீழ்க்கண்ட நான்காவது திட்டத்தில் வேண்டிய மாறுதல்கள் செய்யப்படும். போருக்காகத் திட்டத்தைக் கைவிடவோ, ஒத்திவைக் கவோ முடியாது. விவசாய விருத்தியும், தொழிற் பெருக்கமும் தேசப் பாதுகாப்பிற்கும் மிகமிக அவசிய மானவை. இக்காலத்து யுத்தம் போர்க்களங்களில் மட்டும் நடப்பதன்று: ஒவ்வொரு வயலிலும், ஒவ் வொரு தொழிற்சாலையிலும் அது நடப்பதாகும். களத் திலே நிற்பவர்கள் சில லட்சம் ஜவான்களே ஆளுல் நாடெங்கும் கட்டுப்பாட்டுடன், இரவும் பகலும் உழைக்க வேண்டியவர்கள் கோடிக்கணக்கான மக்கள். நான்காவது திட்டத்தின் மதிப்பீடு வருமாறு : 4-ஆவது திட்டத்திற்கு மொத்தம் ஏறத்தாழ ரூ. 22,600 கோடி செலவாகுமென்று மதிப்பிடப்படு கிறது. i. 3.11