பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/326

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குடைந்து சுரங்க வழி மூலம் இணைப்புக்கள் அமைக்கப் பெற்றுள்ளன. முதல் மின்சார உற்பத்தி நிலையம் வேலை செய்து வருகின்றது; இரண்டாவது நிலையமும் விரைவில் முடியும். மொத்தமாக இப் பெரிய திட்டத் திற்குச் சுமார் ரூ. 35 கோடி செலவாகும். மதுரை மாவட்டத்தில் பெரியாறு அணையில் மின்சார உற்பத் தித் திட்டம் சுமார் ரூ. 10 கோடிச் செலவில் நிறை வேறியுள்ளது. மூன்று மின் சக்தி உற்பத்தி இயந்திரங் கள் வேலை செய்து வருகின்றன. நாடு சுதந்தரமடைந்த பொழுது 80.4 கிராமங் களே மின்சார வசதி பெற்றிருந்தன. 1964-65 இல் 19,393 கிராமங்கள் அப்பயனைப் பெற்றுள்ளன; இதே ஆண்டில் 2, 24, 3 62 விவசாயப் பம்பு செட்டுகள் மின்சாரத்தால் வேலை செய்கின்றன. கல்பாக்கத்தில் அனல் மின்சார நிலையமும், நெய்வேலியில் கூடுதலாக ஒரு மின்சார நிலையமும் கட்டப்பட்டால்தான் நமது மின்சாரத் தேவை ஓரளவு நிறைவுபெறும். பாசனத் திட்டங்கள் கீழ்ப் பவானி அணை : 15.23 அடி நீளத்திற்குக் கல் கட்டடமும், 27, 319 அடிக்கு மண் அணையும் அமைக்கப் பெற்று வேலைமுடிந்துவிட்டது. கோவை மாவட்டத்தி லுள்ள இந்த அணைக்குச் செலவு சுமார் ரூ. 94 கோடி. இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங் களுக்கு இதல்ை பாசன வசதி கிடைக்கும். மணி முத்தாறு அணை : 1957-இல் முடிந்த இந்த அணைக்குச் சுமார் ரூ. 5 கோடி செலவாகியிருக்கின் றது. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் புதிதாக 20,000 ஏக்கர் நிலங்களுக்கு நீர் கிடைக்கும். அமராவதி அணை : கோவை மாவட்டத்திலுள்ள இவ்வணை ரூ. 310 லட்சம் செலவில் அமைந்துள்ளது. B 1 6