பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/327

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1957-இலிருந்து பாசனத்திற்குத் தண்ணிர் விடப்படு கின்றது. இதன் நீர்த் தேக்கம் பழைய நிலங்கள் ஏக்கருக்குப் பயன்படுத்துவதுடன், புதிதாக 21,000 32, 000 ஏக்கரில் விவசாயம் செய்யவும் உதவும். வைகை அணை : ரூ. 3.30 லட்சம் செலவில் அமைந்த இந்த அணை மதுரை, இராமநாதபுரம் மாவட்ட நிலங் களில் 20,000 ஏக்கருக்கு உதவியாகும். சாத்தனூர் அணை : வட ஆற்காடு மாவட்டத்தில் ரூ. 242 லட்சம் செலவில் அமைந்துள்ள இந்த அணையி லிருந்து 22 மைல் நீளமுள்ள தலைக் கால்வாயும், 55 மைல் நீளமுள்ள கிளைக் கால்வாயும் 21, 000 ஏக்கர் நிலங்களுக்குப் பயன்படும் முறையில் செல்கின்றன. கிருஷ்ணகிரி அணை: சேலம் மாவட்டத்திலுள்ள இவ் வணை ரூ. 172; லட்சத்திற்குச் சற்றுக் குறைந்த செல வில் முடிந்திருக்கிறது : உத்தேசிக்கப் பெற்ற செலவு ரூ. 202 லட்சத்திற்கு மேல். தற்போது 7,500 ஏக்கர் நிலங்களும், இறுதிக் கட்டத்தில் 9,000 ஏக்கர் நிலங் களும் பயன் பெறும். ■ அரணியாறு அணை : செங்கற்பட்டு மாவட்டத்தி லுள்ள இதில் அணைக்கட்டு 5 16 அடி நீள மிருந்தபோதி லும், மண் அணைப் பகுதி 2 மைல் 2 பர்லாங்குக்கு அமைந்துள்ளது. செலவு ரூ. 104 லட்சம். புதிய பாசன வசதிகள் ஏற்படுவதுடன், பருவ நிலை நன்ருக உள்ள காலங்களில் இதல்ை 4,900 ஏக்கர்களில் இரண் டாம் போகமும் பயிர் செய்ய முடியும். வீடுர் அணை : தென்னுற்காடு மாவட்டத்தில் வராக நதியில் அமைந்துள்ள இந்த அணைக்குச் சுமார் ரூ. 61 லட்சமே செலவாகி யிருக்கின்றது. கால்வாய்கள் : மேட்டுர் கால்வாய் கோவை, சேலம் மாவட்டங்களில் 45,000 ஏக்கர்களுக்குப் பாசன வசதி அளிப்பது. இது இரு கிளைகளாக வெட்டப்பட்டுள்ளது. 3 17