பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/329

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உரங்கள், கருவிகள் முதலியவை வழங்கப் பெறுவ துடன், முன்னேற்ற முறைகளைப் பற்றிய பிரசாரமும் நடைபெறுகின்றது. பெருங் தொழில்களும் சிறு தொழில்களும் தொழிற்சாலைகள் அமைப்பதிலும், தொழில் முன் னேற்றத்திலும், இருக்கிற வாய்ப்புக்களைப் பயன்படுத் திக்கொண்டு முன்னேறி வருவதில் தமிழ் நாடு மற்ற ராஜ்யங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றது. மத்திய அரசாங்கம் நிறுவக்கூடிய பெரிய தொழில் களில் எத்தனை இங்கு அமைய முடியுமோ அத்தனையும் அமைந்திருக்கின்றன. நெய்வேலி நிலக்கரி உற்பத்தி யைப் பற்றி முன்னல் குறிக்கப் பெற்றுள்ளது. இரண சிகிச்சைக்குரிய கருவிகளைக் கிண்டியில் உற்பத்தி செய்யவும், சினிமா படங்களெடுக்க உதவும் பிலிம்களை நீலகிரியில் தயாரிக்கவும், நாட்டுப் பாதுகாப்புக்குரிய இரு பெரும் தொழில்களை ஆவடியிலும், என்னுாரிலும் அமைக்கவும் தமிழ் நாட்டு அரசாங்கம் ஏற்பாடு செய் திருக்கின்றது. 1962-இல் மட்டும் தமிழகத்தில் 687 புதிய தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. நாள் ஒன் றுக்கு இரண்டு தொழிற்சாலைகள் வீதம் ஏற்பட்டிருப் பது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. கூட்டுறவு முறையில் மதுராந்தகம், உடுமலைப் பேட்டை, ஆம்பூர் ஆகிய இடங்களில் 3 சர்க்கரை ஆலைகள் அமைந்துள்ளன. 1956-57-இல் 63,000 டன் சர்க்கரை தயாரிக்கப்பட்டது . 1961-62-இல் தனி யார் ஆலைகளிலும், கூட்டுறவு ஆலைகளிலும் சேர்ந்து 1,32,000 டன் உற்பத்தியாகி யிருக்கிறது. காகிதம், இரசாயன உரங்களின் உற்பத்தி, குறிப்பிட்ட இயந் திரங்கள் தயாரித்தல், அலுமினியப் பொருள்கள் தயாரித்தல் முதலிய தொழில்களை மேலும் அபிவிருத்தி J 19