பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/332

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6,836 இருக்கின்றன. இதனால் அதிக மக்களுக்குத் தொழில் கிடைத்திருக்கிறது. மத்திய அரசு தமிழகத் தில் ரூ. 175 கோடி முதலீடு செய்துள்ளது. ரஷ்ய உதவியுடன் ரூ. 50 கோடி மூலதனத்துடன் 'ஆப ரேஷன் கருவிகள் தொழிற்சாலை வேலை செய்யத் தொடங்கியுள்ளது. ஆவடியில் முக்கியமான போர்க் கருவியான டாங்குத் தொழிற்சாலையும், திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலையும் நன்கு வேலை செய்து வருகின்றன. 1956-இல் 82 ஜவுளி மில்களே இருந் தன. 1961-இல் 134 மில்களாய்ப் பெருகியிருந்தன. 3-ஆவது திட்டத்தில் மேலும் 22 மில்கள் தோன்றி யுள்ளன. ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் மிருது உருக் கைத் தயார் செய்யும் தொழிற்சாலையும், 4 லட்சம் டன்னுக்கு மேல் சிமிண்டு உற்பத்தி செய்யும் தொழிற் சாலையும் நான்காவது திட்ட ஆரம்பத்தில் உற்பத்தி தொடங்கும். திருச்சி அருகில் ரூ. 25 கோடி மூலதனத்துடன் பாய்லர் தொழிற்சாலை வேலை தொடங்கி உற்பத்தி செய்து வருகின்றது. 3,000 ஏக்கர் நிலத்தின் நடு வில் இது திருவெறும்பூரில் அமைக்கப்பெற்றுள்ளது. இதற்காகத் தனி ரயில் பாதைகளும் அமைந்துள்ளன. பாய்லர் மின்சார உற்பத்தி செய்ய உதவும். அது பார்வைக்கு மூன்று மாடிக் கட்டடம் போலிருக்கும். ஒரு பாய்லரின் விலை ரூ. 10 கோடியாகும். அப்படி ஆண்டுக்கு 12 பாய்லர்கள் உற்பத்தி செய்யக்கூடியது திருச்சி பாய்லர் தொழிற்சாலை. மேலும் தொழிற் பெருக்கத்திற்காக மட்டும் நான் காவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூ. 600 கோடி தேவையென்று தமிழ்நாட்டு அரசாங்கம் முடிவு செய் துள்ளது. 322