பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லட்சம் மக்களுக்கும், மற்றத் தொழில்களில் 140 லட் சம் மக்களுக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கு மென்று எதிர்பார்க்கப் பெறுகிறது. விவசாயத்தின் முக்கியத் தைக் கருதி, திட்டத்தில் அதற்கு முதலிடம் அளிக்கப் பெற்றிருக்கின்றது. பல வகைகளில் அதற்காக ஒதுக்கியுள்ள தொகை ரூ. 1, 281 கோடி. கால்நடை பேணவும், பெரிய நகரங்களில் புதிய பால் பண்ணைகள் அமைக்கவும், மீன் வளத்தை அதிகமாய்ப் பயன்படுத்த வும், வனங்களின் பாதுகாப்புக்கும் தக்கபடி தொகை கள் ஒதுக்கப் பெற்றுள்ளன. விவசாயத்திற்கு அடுத்த படி பெருந் தொழில்களுக்கும் சிறுதொழில்களுக்கும் பெருந்தொகைகள் செலவிடப்பெறும். சீனுவால் நேர்ந்த இடையூறு இந்தியா வெற்றிப் பாதையில் வேகமாக முன் னேறி வருவதில் மூன்ருவது திட்டம் அடுத்த பெருந் திட்டங்களுக்கு வழி திறந்துவிடுவதாக அமைந்துள் ளது. இவ்வாறு இன்னும் சில திட்டங்களை நிறை வேற்றினல், மேற்கொண்டு அதிகச் செலவுகளின்றி நாடு நிரந்தரமான நன்மையைப் பெற்று உலகத்தில் தனக்குரிய உயர்ந்த நிலையை அடைய முடியும். ஆனல் மூன்ருவது திட்டத்திற்கே இடையூருகச் சீன படையெடுத்து வந்தது. சீனப் படையெடுப்பும், ஓயாத பயமுறுத்தல்களும் போர் க் களங் களி ல் போரிடுவதோடு நம்மை விடவில்லை. அவை நமது பொருளாதார நிலைமையை அடியுடன் மாற்றலாயின. அவசரத்திற்கு வெளிநாடுகளிலிருந்து சில ஆயுதங் களைப் பெற்றுக் கொண்டதுடன் நமது பிரசினை தீர்ந்துவிடவில்லை. நிரந்தரமாக நாட்டின் பாதுகாப் புக்குப் புதிய முறையில் ஏற்பாடு செய்யவேண்டியிருந் தது. கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி நம் 3.25