பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/336

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாட்டிலேயே பெரிய அளவில் நவீன ஆயுதங்களையும் மற்றும் போர்க் கருவிகளையும், விமானங்களையும் தயா ரித்தும், லட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட புதுப் படைகள் அமைத்தும், இன்னும் பல்லாண்டுகளுக்கு நாம் ஒவ்வொரு நாளும் போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இக் காலத்துப் போர்த் தளவாடங்கள் சாமானியமானவையல்ல. படைகளுக் கும் கருவிகளுக்கும் ஆகும் செலவுடன், நம் தொழில் களிலும் இடைவிடாது உற்பத்தி பெருகினல்தான் பாதுகாப்புப் பூர்த்தியாகும். தொழில்கள் வேறு, பாது காப்பு வேறு என்று இக்காலத்தில் பிரிக்க முடியாது. போர் வீரர்கள் போர்க் களங்களிலே போராடுகையில், நாட்டு மக்களும் விளை நிலங்களிலும், தொழிற்சாலை களிலும், சுரங்கங்களிலும், மற்ற இடங்களிலும் போராடிக்கொண்டே யிருக்க வேண்டும். இதுவரை எந்த வல்லரசுகளுடனும் கூட்டுச் சேரா மல் ஒதுங்கியிருந்த இந்தியா, போருக்குரிய பொருளா தாரத்தை மேற்கொள்ளவேண்டி யிருந்தது. தொழில் களுக்குச் செலவாகும் பணம் பின்னல் பெரும் பயனளித் துக்கொண்டே யிருக்கும். ஆனல் போர்த் தளவாடங் களுக்குப் போடும் பணம் செலவுதான்பூ அதிலும் வலிமை மிகுந்த எந்த எதிரியையும் சமாளிக்கக்கூடிய வல்லமையை நாம் விரைவிலேயே பெற்ருகவேண்டும். போரினல் நிலைமை மாறிய போதிலும், மூன்ருவது திட்டத்தில் முக்கியமான காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்று இந்திய அரசாங்கம் தீர் மானித்துள்ளது. ஆயினும் திட்டத்தில் சில மாற்றங் கள் செய்யவேண்டியதும் அவசியமாயிற்று. J 26