பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் நாட்டில் நிலமில்லாது விவசாயக் கூலிகளா யுள்ள 5 கோடி மக்கள் இருக்கிருர்கள். அவர்களில் ஒரு பகுதியினருக்கு நிலங்கள் கிடைக்கவும், தேவைக்கு மேல் மிகுதியாக நிலங்களை வைத்திருக்கும் நிலக்கிழார் கள் ஒர் அளவுக்கு மேல் நன்செய், புன்செய் நிலங்கள் வைத்திருக்கக் கூடாதென்று செய்யவும் பல ராஜ்யங் களில் நிலங்களுக்கு உச்ச வரம்பு தீர்மானிக்கப்பெற்று வருகின்றன. தொழில்களிலும் அரசாங்கத்தின் நோக்கம் தெளி வாக விளக்கப்பட்டுள்ளது. ஸோஷலிஸ்ப் பாணியில் சமுதாயத்தை அமைப்பதே இலட்சியம் என்று கூறப் பட்டுள்ளது. 1956, ஏப்ரல் 30-ந் தேதி நமது பார்லி மென்டில் நிறைவேறிய தீர்மானம் பின் கண்டவாறு தெரிவிக்கின்றது. 6 ஸோஷலிஸப் பாணி சமுதாய அமைப்பை இலட் சியமாகக் கொண்டிருப்பதாலும், திட்டமிட்டு விரைவில் அபிவிருத்தி செய்யவேண்டி யிருப்பதாலும். அடிப்படை யான, கேந்திர முக்கியத்துவமுள்ள தொழில்கள் அல்லது ஜன நன்மைக்கான ஊழியங்கள் யாவும் பொதுத் துறை யில் இருக்கவேண்டியது அவசியமாகின்றது. மற்றும் அவ சியமான தொழில்களையும், தற்போதைய நிலையில் அர சாங்கம் மட்டுமே பெரிய அளவில் மூலதனமிடக்கூடிய தொழில்களாயும் இருப்பவையும் பொதுத் துறையில் இருக்க வேண்டியவை. ஆதலால் பெரிய அளவுள்ள பிர தேசத்தின் எதிர்கால அபிவிருத்திக்குரிய நேரிடையான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டி யிருக்கின்றது.' முதலாளித்துவ முறை இதல்ை அரசாங்கம் மேற்கொள்ளாத தொழில் களையே தனியார் துறை செய்ய வேண்டியிருக்கும் என்பது தெளிவு. ஆனல் நடைமுறையில் அத் 328