பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/340

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கூட்டுறவுச் சங்கங்கள் 3, 13,499 : புழக்கத்திலிருந்த மூலதனம் ரூ. 1,083 கோடி. * - இவ்வாறு இந்தியப் பொருளாதார நிலையே மாறு தலடைந்து வருவதில் இங்குள்ள முதலாளித்துவ முறையும் மாறி வருகின்றது. சில விதிகளின்படி வெளிநாட்டார் இந்தியாவில் முதலீடு செய்து தொழில்கள் நடத்தவும் வசதி செய் யப்பட்டிருக்கின்றது. 1953-ல் இங்கு வெளி மூலதனம் ரூ. 420 கோடி இருந்தது. பின்னும் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் முதலிய நாடுகள் முதலீடு செய் துள்ளன. பழைய தொழில்களிலே சில இன்னும் ஆங்கிலேயர் வசம் உள்ளன. மிகப் பெரிய சணல் மில்கள் 12-இல் 10 அவர்களிடமும், இரண்டு மட்டும் இந்தியர் வசமும் இருக்கின்றன. மொத்தம் சணல் மில்கள் 76-க்கு மேலுள்ளன. தேயிலை உற்பத்தி செய் யும் முக்கியமான கம்பெனிகள் 150-இல் முதன்மை யானது 12-ம் ஆங்கிலேயர் நிர்வாகத்திலுள்ளன. சுமார் 400 நிலக்கரிக் கம்பெனிகளிலும் பிரிட்டி வடிாரின் பங்கு:கணிசமாக உண்டு. அமெரிக்காவின் உதவிகள் H - நம் திட்டங்களை நிறைவேற்ற அமெரிக்க ஐக்கிய நாடு கோடிக்கணக்கான பொருள் கொடுத்து உதவி வருகின்றது. 1962 ஆகஸ்ட் முடிய அதன் உதவி ரூ. 2, 0.72 கோடி. பொருளோடு நிற்காமல், உணவுக் கான கோதுமை போன்றவைகளையும் அது அனுப்பு கின்றது. 1962-இல் ரூ. 1,200 கோடி பெறுமான முள்ள விவசாய விளைபொருள்களை அனுப்பி, அத் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை இந்தியாவில் கல் விக்காகவும், தொழிற் பயிற்சி கொடுப்பதற்காகவும் செலவழித்துக்கொள்ள அநுமதி யளித்தது. 3 & O