பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தரப் பிரதேசத்தில் கான்பூரிலும், வங்காளத் தில் கரக்பூரிலும் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு அமெரிக்கா பலவித உதவிகள் செய்து வருகின்றது. டில்லியிலுள்ள தேசியக் கல்வி நிலையத்திற்கும், கிண்டி, புளு, ஹெளரா, ரூக்கீ முதலிய இடங்களிலுள்ள எஞ்சினியரிங் கல்லூரிகளுக்கும் நூல்கள், ஆராய்ச்சிக் கருவிகள் முதலியவைகளை அளித்து, தேர்ந்த நிபுணர் களையும் அனுப்பி யிருக்கின்றது. 1958-க்குப் பின் இதுவரை நம் எஞ்சினியரிங் கல்லூரிகளிலிருந்து 400 ஆசிரியர்கள் அமெரிக்காவில் பயிற்சி பெற்று வந்திருக் கின்றனர். பங்த்நகர், புவனேஸ்வர், லூதியான ஆகிய இடங்களிலுள்ள விவசாயப் பல்கலைக் கழகங்களுக்கு அமெரிக்கா ஆசிரியர்களும், கருவிகளும் அனுப்பி உதவி வருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, மூன்ருவது திட்டத்தை நிறைவேற்றி வைக்க உதவி புரிவதற்காக 7,800 தொழில் நிபுணர்களான ஆசிரியர்களைத் தயா ரிக்கப் பம்பாயிலுள்ள குர்லாவில் அமெரிக்காவும், இந்தியாவும் சேர்ந்து ஒரு மத்தியப் பயிற்சி நிலையம் அமைப்பதைக் குறிப்பிடவேண்டும். இந்த ஆசிரியர் கள் மற்றும் பல்லாயிரம் தொழில் நிபுணர்களைத் தயா ரிப்பார்கள். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு.இந்தியா என்பதை அமெரிக்கா அறிந்துள்ளது. பிரிட்டனின் உதவி இங்கிலாந்து மூன்று வகையில் நம் தொழில் வளர்ச்சிக்கு உதவி வருகின்றது. சீமையிலே இந்தியர் களுக்குப் பயிற்சி அளிக்கின்றது ; தொழில் நிபுணர் களை இங்கு அனுப்புகின்றது : பயிற்சிக்குரிய கருவி களையும், ஆராய்ச்சி நிலையங்களுக்குத் தேவையான கருவிகளையும் அளிக்கின்றது. 1962-இல் 205 இந்தியர் சீமையிலே பயிற்சி பெற்று வந்தனர். 1950-இலிருந்து $ 8Ꮨ