பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவும் ரஷ்யா இணங்கியது. இந்தியாவிலிருந்து ஏற்று மதியாகும் பொருள்களில் இந்திய ஆலைகளில் தயா ராகும் பொருள்களும் அதிகம். 1964-இலிருந்து இந்தி யாவுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்ட ஐந்தாண்டு ஒப்பந் தத்தின்படி ஒவ்வோர் ஆண்டிலும் 14 கப்பல்கள் இங்கிருந்து ரஷ்யாவுக்கு நிரந்தரமாகச் சென்றுவர வேண்டியிருக்கும். சுமார் 300 இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் தொழிற் பயிற்சி பெற்று வருகின்றனர். 'எம். ஐ. ஜி விமானங்களை ரஷ்யா இந்தியாவுக்கு அனுப்பியதுடன், அவைகளையும், உரிய ஆயுதங்களே யும் இங்கேயே உற்பத்தி செய்ய உதவி புரியவும் இசைந்துள்ளது. தன் கையே தனக்கு உதவி வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள் இல்லாமல் நம் திட்டங்களை நிறைவேற்றுதல் எளி தன்று. ஆயினும் அந்த உதவிகளே மட்டும் நம்பி நம் அரசாங்கம் திட்டங்களைத் தயாரிக்கவில்லை. முக்கிய மான மூலதனங்களை நம் மக்களே அளித்து வரு கின்றனர். மத்திய அரசாங்கமும் ராஜ்ய அரசாங்கங் களும் வரிகளின் மூலம் பெருந்தொகைகள் பெறு கின்றன. கடன் பத்திரங்களின் மூலம் உள் நாட்டில் கடன்கள் வாங்கப் பெறுகின்றன. கடைசியாகக் குறை விழும் தொகை அரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் செலவாகக் குறிக்கப் பெறுகின்றது. 1947 இலிருந்து 15 ஆண்டுகளில் நமது மத்திய, மாகாண அரசாங்கங்களின் வருமானம் வருமாறு : மத்திய அரசாங்கத்தின் வருமானம் ... ரூ. 8,160 கோடி ராஜ்ய அரசாங்கங்களின் 15 ... ரூ. 11,600 , பொதுக் கடன் ... ரூ. 7,100 , மொத்தம் ரூ. 26,860 ,