பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/346

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாகிஸ்தான் "இரு தேசிய சமூகக் கொள்கையை நாம் ஒப்புக் கொண்டு மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தா னுக்கு விட்டுக்கொடுத்தால், அதன் பயனக இந்தியா துண்டு துண்டாய்ப் போய்விடும். அதே கொள்கை உலகம் முழுவதற்கும் கையாளப்பட்டால், தற்கால ராஜ்யம் ஒன்றுகூட எஞ்சியிராது." - - ஒய். பி. சவான் பிரிவினையால் வந்த வினை இந்தியாவின் இடதுபுறத்திலும் வலதுபுறத்திலும் பாகிஸ்தானின் இரு பிரிவுகள் அமைந்திருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் ஆயிரம் மைல் நீளம் இந்தியப் பூமி இருக்கிறது. இவ்வளவு தூரம் பிரிந்துள்ள இரு பகுதிகளை ஓர் இராஜ்யமாக அமைத்ததே உலகில் பெரிய அதிசயமாகும். இந்தியாவின் சம்மதமில்லா மல் மேற்குப் பாகிஸ்தானிலிருந்து கிழக்குப் பாகிஸ்தா னுக்கு நில மார்க்கமாகச் செல்ல முடியாது. பாகிஸ்தான் ஏற்பட்டதிலிருந்து அதற்கும் இந்தி யாவுக்கும் சில விவகாரங்கள் இருந்தன. இந்தியா வுடன் ஒட்டியிருந்த ஜுனுகாட் போன்ற சில சிறு சமஸ்தானங்களைப் பாகிஸ்தான் தன்னுடன் சேர்த்துக் கொள்ள விரும்பியதால், இந்தியா அதைத் தடுத்து 3.36