பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/347

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிறுத்தவேண்டி யிருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஒரே மாகாணமாக விளங்கிய பஞ்சாபை இரண்டாகப் பிரித்து மேல் பகுதியைப் பாகிஸ்தானுக்கு அளித்ததா லும், வங்காள மாகாணத்தில் கீழ்ப் பகுதியை அதற்கு அளித்ததாலும், ப ா கி ஸ் த ா ன் பகுதிகளிலிருந்த இந்துக்கள், சீக்கியர் முதலியோர் லட்சக்கணக்கில் இந்தியாவுக்கு ஓடிவந்தார்கள். பாகிஸ்தான் முஸ் லிம்கள் அவர்களில் பலரை இரவும் பகலும் வதைத் துக்கொண் டிருந்தார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் தனியான இரு தேசிய சமூகங்கள் என்ற முஸ்லிம் லீகின் துவேஷப் பிரசாரம், நாட்டைப் பிரித்த பிறகும், நிலைத்து நின்றது. எனவே முஸ்லிம்களின் கொடுமைகளைத் தாங்காமல் 90 லட்சத்திற்கு மேற் பட்ட அகதிகள் தங்கள் வீடு, வாசல், நிலம், கரைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இந்தியாவுக்கு வந் தார்கள். அவர்கள் அனைவரையும் காப்பாற்றி, அவர் களுக்குக் குடியிருப்பு, தொழில் வசதிகள் செய்து கொடுக்க இந்திய அரசாங்கம் பல்லாயிரம் லட்சம் ரூபாய்கள் செலவழிக்க வேண்டியிருந்தது. இந்த வகையில் மொத்தம் ரூ. 420 கோடி செலவாகி யுள்ளது. நம் அகதிகள் மேற்குப் பாகிஸ்தானில் மட்டும் தி 8 லட்சம் ஏக்கர் விளைநிலங்களையும், ரூ. 500 கோடி மதிப்புள்ள வீடுகளையும், மனைகளையும் விட்டு வந்துள்ள னர். இந்தச் சொத்துக்கள் விஷயமாகப் பாகிஸ்தா னுடன் இதுவரை பேச்சு வார்த்தை நடத்திவந்தும், அது ஒரு பைசா கூடக் கொடுக்கவில்லை. சொத்துக்கள் அனைத்தையும் அது தானே எடுத்துக்கொண்டு, அங் குள்ள முஸ்லிம்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக் கிறது. இ. இ? . шт. — 22 3 3 7