பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்வாய்கள் பற்றிய தகராறு நதிகளின் நீரைப் பகிர்ந்துகொள்வதிலும் இந்தி யாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாகத் தகராறு இருந்துவந்தது. பஞ்சாப் ஒரே மாகாணமாக இருந்தபொழுது சிந்து நதி, அதன் கிளைகளான ஜீலம், சீனப், ரவி, பியாஸ், ஸ்ட்லெஜ் ஆகிய நதிகளின் நீரால் மாகாணம் முழுதும் விவசாயம் நடந்துவந்தது. திடீ ரென்று மாகாணம் இரண்டாக வெட்டப்பட்ட போதி லும், ஆறுகளே வெட்டிப் பிரித்துக்கொள்ள முடியாதல் லவா? ஸ்ட்லெஜ், பியாஸ், ரவி நதிகளின் கால்வாய் கள் இந்தியாவில் தொடங்கிலுைம் பாகிஸ்தானி லேயே பெரும்பகுதி ஒடுகின்றன. 25 கால்வாய்களில் இரண்டு மட்டுமே இந்தியாவில் இருக்கின்றன. பஞ் சாபை இரு பிரிவுகளாக்கியதில், இந்தியப் பகுதியில் 50 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு மட்டும் பாசன வசதி இருக்கின்றது. பாகிஸ்தான் பகுதியில் 180 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு அவ்வசதி இருக்கின்றது. இந்தி யப் பகுதியிலுள்ள நிலங்கள் சாதாரணமானவை, பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாப் நிலங்கள் வளம் மிகுந்தவை: பாசன வசதிகள் அதிகமுள்ளவை. சிந்து நதியையும் அதன் கிளைகளையும் பாசனத்திற்காக நம்பி யிருக்கும் 850 லட்சம் ஏக்கர் நிலங்களில் 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்தியப் பகுதியில் இருக்கின்றன. ஆறுகளின் நீரைப் பிரித்துக்கொள்வது பற்றிப்பாகிஸ் தான் நெடுநாளாகப் பூசல் செய்துவந்த போதிலும், 1960, செப்டம்பர் மாதம் 'சிந்து நீர் ஒப்பந்தம்' ஒன்று செய்து கொள்ளப் பெற்றிருக்கிறது. நிதி உதவி பாகிஸ்தான் நம்முடன் பிணங்கி ஓயாமல் தொந் தரவு கொடுத்துவந்த போதிலும், நாம் அதனிடம் 3.38 J.