பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நெருங்கிய இன ஒற்றுமைகளுண்டு. இவர்கள் திபேத்திய இனங்களைச் சேர்ந்தவரல்லர்.

நேபாவில் இந்திய அரசாங்கத்தின் அதிகாரம் நெடுங்காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதைத் தவிர, திபேத்துக்கு அங்கு எந்தக் காலத்திலும் அதிகாரம் இருந்ததில்லை. நேபாவின் வட எல்லை தான் சரித்திரப் புகழ் பெற்றுவிட்ட மக்மகான் கோடு. இந்த எல்லை பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்த தளபதி ஸர் ஹென்றி மக்மகான் (18621949) என்ற அதிகாரியால் நிர்ணயிக்கப் பெற்றதால், இதற்கு அவருடைய பெயரே வைக்கப் பெற்றுள்ளது.

திரு. மக்மகான் இந்தியாவிலேயே பிறந்த ஐரிஷ் வமிசத்தினர். அவருடைய முன்னோர்கள் பலர் இந்தியாவில் பணியாற்றியவர்கள். அவர்களைப் பின்பற்றி மக்மகானும் பல பதவிகளில் இருந்து இந்நாட்டுக்கு அரிய தொண்டுகள் செய்து வந்தவர். இந்திய அரசியல் இலாகாவில் அவர் 24 ஆண்டுகள் சேவை செய்தார். மலை நாடுகள், காடுகள் முதலியவற்றைச் சுற்றிப் பார்த்துப் பூதத்துவத்தை ஆராய்ந்து பார்ப்பதில் அவருக்குப் பெரு விருப்பம் உண்டு. இமயமலைய் பிரதேசங்கள், பஞ்சாப், ஆப்கானிஸ்தானம், காபுல், பலுசிஸ்தானம் முதலிய பிரதேசங்களைப் பற்றி அவர் பல விஷயங்களை ஆராய்ந்து தெரிந்து வைத்திருந்தார். எல்லைகள் வகுத்து நிர்ணயம் செய்வதில் அவர் வல்லவர்.

1910-இல் சீன திபேத்தின் மீது படையெடுத்ததில் சீனத் துருப்புக்கள் அஸ்ஸாம்-திபேத்து எல்லையில் நடமாடி வந்ததால், அந்தப் பிராந்தியங்கள் அனைத்தையும் சுற்றிப் பரிசீலனை செய்து, துல்லியமான எல்லைக் கோட்டை அமைக்க வேண்டியது அவசிமாயிருந்தது. மாமூலாக உள்ள எல்லையே யென்றாலும்,

31