பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/350

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


து வேவித்து வருகின்றது. உலகில் அதற்குப் பகை நாடாகத் தோன்றுவது இந்தியா ஒன்றுதான். பாகிஸ் தான் அதிபர்களும் இந்தியாவுக்கு விரோதமாகச் சென்ற 18 ஆண்டுகளாகவே அனல் கக்கிப் பேசி வரு கின்றனர். பாகிஸ்தான் பத்திரிகைகள் யாவும் இந்தி யாவைப்பற்றிப் பொய்களையும் புரட்டுக்களையும் எழு தித் துவேஷப் பிரசாரம் செய்து வருகின்றன. அங் குள்ள இந்துக்களே அடிக்கடி துன்புறுத்தலும், விரட் டுதலும் இடைவிடாது நடந்து கொண்டே யிருக்கின் றன. பாகிஸ்தான் அமெரிக் கா வுட ன் நட்புறவு கொண்டு, ஆயுதங்களேயும் பணங்களையும் பெற்றுக் கொண்டிருப்பது இந்தியாவைத் தாக்குவதற்காகவே. அது பிரிட்டனுடன் உறவாடுவதும் அதற்காகவே. வnட்டோ, ஸென்டோ முதலிய இராணுவக் கூட்டுக் களில் அவைகளுடனும், சில மத்திய ஆசிய நாடுகளுட னும் சேர்ந்திருப்பதும் இந்தியாவுக்கு எதிராகத்தான். இந்தியாவைத் தாக்குவதுதான் அதன் கனவாகவும் நினைவாகவும் இருக்கின்றது. இவைகளுக் கெல்லாம் காரணம் என்னவென்று கேட்டால், காஷ்மீர் எங். களைச் சேரவேண்டும் அங்கே பெரும் பகுதியினராக முஸ்லிம்களே இருக்கின்றனர்' என்று பாகிஸ்தான் தலைவர்கள் கூறிவருகிரு.ர்கள். காஷ்மீர் காஷ்மீர் பற்றி முதல் அதிகாரத்திலேயே சிறிது குறித்துள்ளோம். இப்பொழுது இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்திற்கு அதுவே அடிப்படையாக விளங்குவ தால், அதைப்பற்றிச் சற்று விவரமாகத் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் வடக்கு எல்லையாக விளங்கும் இராஜ்யம். அதன் பரப்பளவு 340