பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/351

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84,471 சதுர மைல். அது மூன்று பகுதிகளைக் கொண்டது. எல்லேப்புற மாவட்டங்கள், காஷ்மீர், ஜம்மு ஆகியவை அப்பகுதிகள். அதன் வடகிழக்கில் திபேத்தும், வடக்கில் சீன மாகாணமாகிய ஸிங்கியாங் கும், வடமேற்கில் ஸோவியத் குடியரசான துருக்கிஸ் தானும், ஆப்கானிஸ்தான் நாடும், மேற்குப் பக்கம் பாகிஸ்தானும் இருக்கின்றன. எனவே அதன்மூலம் இந்தியா சீனவுடனும், ஸோவியத் ரஷ்யாவுடனும், ஆ. ப் கா னி ஸ் தா னு ட னு ம், பா கி ஸ் தா னு டனும் தொடர்பு கொண்டுள்ளது. எனவே காஷ்மீர் சர்வ தேச உறவுமுறையில் எவ்வளவு முக்கியமாக இடம் பெற்றிருக்கிறது என்பது இதிலிருந்து விளங்கும். காஷ்மீர் இராஜ்யத்தில் (1941-ஆம் ஆண்டுக் கணக் குப்படி) 40, 21, 616 மக்கள் இருந்தனர். அவர்களில் முஸ்லிம்கள் 30, 73,540 (77.11%) பேர்கள்; இந்துக் கள் 8,07,549 (20.12%) பேர்கள் ; கிறிஸ்தவர்கள் 3,079 பேர்கள்; மலைஜாதியினர் 29, 374 பேர்கள். முக்கியமாகப் பெளத்த சமயத்தினரைக் கொண்ட பிறர் 1,08, 074 பேர்கள். 1957-இல் ஜனத்தொகை 44, 1 லட்சம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது; இப் பொழுது அதிகமாய்க் கூடியிருக்கவேண்டும். காஷ்மீரில் முஸ்லிம்களே பெரும் பகுதியினர் என்று பாகிஸ்தான் பறை சாற்றிக்கொண்டிருக்கின் றது. அது உண்மைதான். ஆனல் வரலாற்று முறை யாகப் பார்த்தால் காஷ்மீர் இந்துக்களின் நாடே யாகும். காஷ்மீரின் வரலாறே இந்துச் சக்கரவர்த்தி யாகிய அசோகர் ஆட்சியிலிருந்துதான் தொடங்கு கின்றது. கி. பி. 1339-இல் முஸ்லிம்கள் அங்கே ஆட்சியைக் கைப்பற்றும்வரை அங்கு 28 தலைமுறைக ளாக இந்து மன்னர்களே ஆட்சி புரிந்துவந்தனர். 1719-இல் ரஞ்சித்சிங் தலைமையில் சீக்கியர்கள் 34 I