பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/352

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அதைக் கைப்பற்றிக்கொண்டனர். கடைசியாக 1947இல் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்துகொண்ட காலத்திலும் அதை ஆண்டுவந்தவர் ஹரிசிங் என்ற இந்து மகாராஜாவேயாவார். முஸ்லிம்களின் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலான இந்து மக்கள் முஸ்லிம்க ளாக்கப்பட்டனர். காஷ்மீர் முஸ்லிம்கள் நிறைந்த ராஜ்யம், அது பாகிஸ்தானையே சேரவேண்டும் என்று அயூப்கானும், வெளியுறவு மந்திரி பூட்டோவும் அலறிக்கொண்டே யிருக்கின்றனர். சேருவதற்கு ஒரு சட்டம், முறை, காரணம் ஏதாவது இருக்கவேண்டாமா ? இந்தியாவி லிருந்த 600-க்கு மேற்பட்ட சமஸ்தானங்கள் 1947இல் இந்திய ராஜ்யத்திலேயே சேர்ந்துகொண்டன. அதாவது, அவைகளின் அதிபர்களான ராஜாக்களும் மகாராஜாக்களும் சேர இசைந்துவிட்டனர்; இதைப் போலவே காஷ்மீர் மகாராஜாவும் காஷ்மீர் இந்தியா வுடன் சேரும் பத்திரத்தில் கையொப்பமிட்டு, அதைச் சேர்த்துவிட்டார். அத்துடன் மக்களின் கருத்தைத் தெரிவிக்கும் அந்த ராஜ்யத்தின் முதன்மையான தேசிய மகாநாடும், அதன் தலைவர்களும் இசைவு தெரிவித்தனர். அங்கிருந்த யதேச்சாதிகார ஆட்சி முறையை மாற்றி இந்தியா தன் மற்ற ராஜ்யங்களைப் போல அங்கும் ஜனநாயக அரசியலை அமைத்துள்ளது. மூன்று பொதுத் தேர்தல்களும் நடந்துவிட்டன. நிலைமை இவ்வாறிருக்க, காஷ்மீருக்கும் பாகிஸ்தானுக் கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது ? முஸ்லிம்கள் அதிகமாயுள்ள நாடுகளெல்லாம் பாகிஸ்தானுடன் சேர்ந்து ஐக்கியமாகிவிட வேண்டு மால்ை, ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி போன்ற நாடுகளையும் பாகிஸ்தான் சேர்த்துக் கொள்ள முயலட் டுமே! Ꮽ 4 ☾